இயந்திர வாழ்க்கை
ஓடி அழுத்த ஓட்டத்தில்
திரும்பி பார்க்க வைக்கும்
சில நினைவுகள்..
குருவி கூடாய்
ஓர் வீடு இருக்க..
கூட்டாஞ்சோறாய்
உணவு சமைக்க..
அன்பு அமுதாய்
அம்மா கையின்
ஒரு பிடியும்
வயிறு நிறைக்க..
அழகாய் கழித்த
காலமும் கடக்க..
தேவையை தேடி
பயணம் தொடர
தொலைந்து தான்
போனது இன்பம்..
பட்டாம்பூச்சியாய்
சுற்றினாலும்
கூடு திரும்ப
நேரமில்லை..
பார்க்கும் கண்களுக்கு
மகிழ்ச்சியாய் தெரிந்தாலும்
மனகுமுறல் சொல்ல
வார்த்தையில்லை..
தேடி தேடி
சேர்த்தாலும் அனுபவிக்க
ஆசையில்லை..
ஓய்ந்து திரும்பி
பார்க்கையில்
ஓடியது ஒன்றும்
இல்லை..
கண் அயரும்
வேளையில்
கதை கேட்க
ஆள் இல்லை..
விரட்ட வைக்கும்
பணம் வேண்டாம்..
துரத்த வைக்கும்
சோதனை வேண்டாம்..
ஓட வைக்கும்
நோய் வேண்டாம்..
சிரிக்க வைக்கும்
வாழ்க்கை வேண்டும்..
சுற்றி இருக்க
சொந்தம் வேண்டும்..
-தேன்கவி
Comments
Post a Comment