Posts

Showing posts from May, 2018
எறும்பு கல்லையே கரைக்கும் மாய சக்தி உன் முயற்சிக்கு ஈடு உண்டோ பேருந்து தொலைதூரம் சென்றாலும் தொடர்கிறது உன் பந்தம் எங்கெங்கும் மேகம் காணும் கண்களும் வசீகரம் செய்யும் அழகிய மாயாஜாலம் நீ வேலி கட்டிப்போட்டு கட்டுப்பாடுடன் இருக்கும் உனக்கோ மனித கட்டுபாட்டு விந்தை தான் மலை அசைக்க முடியாத உன்னை அசைத்து பார்க்கவே படைத்தவன் எண்ணினானோ                                                         -தேன்கவி
சாயம்  பல வண்ணங்களின் கலவை அல்ல  ‎மனித மனங்களிலன் முகத்திரை நீ கடிகாரம் விரட்டி பிடிக்கும் வித்தையும் துரத்தி அடிக்கும் வித்தையும் கற்பித்தவன் நீ மான் துள்ளி குதிக்கும் உன்னை அறியா வண்ணம் நகர்கிறது அடுத்த தலைமுறை மிட்டாய்  மிடுக்காய் நடைபோடுகிறது பொட்டியில் அடைத்த ஒன்று நெகிழி காகிதத்தில் தங்கம் உருக்கி உருக்குலைத்தாலும் தன் நிலை மாறாமல் நிற்பவள் நீயோ                                                  -தேன்கவி
பலூன் காண முடியா மறுஜென்மமும் கண் முன் தோன்றுகிறது என் உயிர் மூச்சு காற்றை நீ சில நேரம் சுமப்பதால் தெரு  அழகாய் துள்ளிய உன் மடியும் அடுக்கு மாடி ஆனது  மனித மாற்றத்தால் வேலை இயந்திரமாய் நீ ஆட்டி வைக்கும் ஆட்டத்திற்கு மனிதனும் நூல் பொம்மை தான் ஒற்றுமை துணிச்சலான சக்தி படைத்த உனக்கு ஒன்றாக்க துணிவு இல்லாமல் போனது ஏனோ நீச்சல்  எதிர்த்து போரிடும் சக்தியை விளக்க உன்னை அன்றி வேறு ஏது                                               -தேன்கவி
விசிறி தன்னை சுற்றிக்கொண்டு அற்புத காற்றால் உலகை மகிழ்விக்கும் அதிசயம் நீ கல்  தூக்கி எறியப்படும்போது தான் வாழ்க்கையின் தூரம் தெரிகிறது  ‎உன்னை தூக்கி எறிவது போல அழுகை உன் வருகையால் தான் உலகில் மனித ஜெனனம் உயிர்பெறுகிறது பால்  உன்னை ஒப்பிட்ட மனித மனமோ கலப்படம் ஆனது இன்று உன்னை போல் வானம் பரந்து விரிந்த உன்னுள் தான் எத்தனை எத்தனை அதிசயங்களோ காண விளி போதவில்லையே                                                     -தேன்கவி
தீவு தனித்து இருப்பதால் தீவுகள் ஆனாயோ அதிசயம் நிறைந்து விளங்குவதால் தீவுகள் ஆனாயோ.. தொடக்கம் வழி தெரியாமல் நின்ற என் எழுத்துகளுக்கு வழிகாட்டியதும் என் எழுத்துக்கு கிடைத்த தொடக்கமே கூடு    தனக்கென தாமே அமைத்துக் கொள்ளும் ஓர் அழகிய ஆலயம்-பறவைகள் உப்பு நீ இல்லா இடம் மிகப் பெரிதானாலும் பயனற்றதே உன்னை அன்றி அறுசுவைகளும் சுவையற்றதே அதுபோலதான் வாழ்க்கையும் நெல்  காற்றில் ஆடும் நெல்மணியும் அழகாய் காவியம் வரைந்தது உவமையால்
நிராகரிப்பு உன்னை ஒருமுறையாவது தழுவியவர்கள் துன் வாழ்வின் பலமுறை முன்னோடி ஆகிறார்கள் அன்புகடல் உன்னில் மூழ்கிய எவரும் உன்னிடம் இருந்த மீள வழிதெரியாமல் தவிக்கின்றன காதல் கண்ட ஓர் நொடியில் கண் இமைக்க மறுக்க கண்முன்னே தோன்றினாயோ சத்தியம் உன்னிடம் வந்தபின் உரிமையுள்ள. உறவும் ஊமையாய் இருக்கும் சிற்பி பத்துவிரலும் படைக்கும் ஓர் உயிரை உன்னையும் பிரம்மா என்று                                                -தேன்கவி
நூலகம் ஆயிரம் ஞானத்தை உன்னில் அடக்கிக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருக்கும் அழகு என்னவோ அழுகை நீ என் அருகில் வருகையில் என் கவலைகள் கரைந்தோடும் மாயம் என்ன இரட்டைகிளவி எந்த பந்தமும் உன்னைப்போல் இணைந்து  இருக்கவே ஏங்கும் நாகரீகம் மாறிவரும் உலகில் உன்னையும் மறந்துபோய் தான் வாழ வேண்டும் போலும் நாலடியார் நான்கு வரியில் ஆயிரம் கதை சொல்லி உள்ளத்தை கொள்ளை கொள்பவள் நீ
உணவு: விளைவித்தவன் ஏங்கும் போது விலைகொடுத்தவன் வீணாக்குகிறான் உன் அருமை தெரியாமல் மனசாட்சி உலகையே உலுக்கும் சக்தி உன்னையன்றி வேறு எவருக்கும் இல்லை திறவுகோல் சிறு துரும்பு ஆனாலும் ஆயிரம் ஆயிரம்  பொருள்களின் பாதுகாப்பு நீயோ ஊதியம் உன் வருகைக்காக உலகமே ஓடாய் தேய்கிறது வாழ்வின் ஓட்டத்தில் கரை தத்தளிக்கும் ஒவ்வொன்றையும் தாங்கிக்கொள்ள தவிக்கும் மடி நீயோ                                                                                                     -தேன்கவி
மயில்: ஆடி கொண்டாடும் உன்னை அடுத்த சந்ததியினர் திரை பிம்பமாகவே காண போகின்றனவோ குடை என் நிழலும் நனையாதடி என் நிழலுக்கும் வியர்க்காதடி நீ என்னோடு இருக்கையில் தவறு பட்டுத் தெரிந்தவனும் பார்த்து தெரிந்தவனும் திண்டாடுகிறான் உன்னை தீண்ட கூடாதென்று ஊமை உரிமைக்கு ஏங்கும் ஊமை கூட பேச தவிக்கும் போரட்டத்தின் முடிவுக்கு அழிப்பான் தெரியாமல் செய்த தவறை திருத்த உதவி நீ இன்று தெரிந்தே தவறு செய்கிறாய் என உதவ மறுக்கிறாயோ
ஏக்கம் பசிக்காக ஏங்கும் குழந்தையும் பணத்திற்காக ஏங்கி ஓடும் வாழ்க்கையும் நிம்மதிக்காக‌ ஏங்குகிறது நினைவு அழகான தருணங்களையும் அழைக்க முடியா தருணங்களையும் உன்னில் வைத்து ரசிக்கிறாய் பாலைவனம் வறண்ட உன்னில் முளைத்த செடிகளும் பேசுகிறது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் உண்டு என்று சேமிப்பு பணம் மட்டும் அல்ல நீ சேமிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அடுத்த தலைமுறையின் சொத்து மேகம் வெள்ளை  நிற காகிதமே காண்போர் கண்கள் எண்ணும் வண்ணம் காட்சியளளிக்கும் விந்தை என்னவோ                                                   -தேன்கவி
பாசம் அண்டமே நின்றுபோகும் நீ இல்லா அந்த ஓர் நொடியில் ‎ பால் வெண்மையான மனமும் குணமும் மனிதர்களிடம் வேண்டும் உன்னை போல் மதிப்பு மௌனமாய் ஒற்றை நொடியில் கடக்க விரும்புகிறேன் நீ என் அருகில் இல்லா நேரத்தை ரசனை புல்மேல் படரும் பனித்துளியும் ஆயிரம் கதை சொல்லும் என்னை ரசிக்க மாட்டாயா என ஏக்கம் பசிக்காக ஏங்கும் குழந்தையும் பணத்திற்காக ஏங்கி ஓடும் வாழ்க்கையும் நிம்மதிக்காக‌ ஏங்குகிறது
தொடர்வண்டி : உலகம் விரிந்து  தெரிகிறது நீ கற்றுத்தரும் ஒவ்வொரு பயண அனுபவத்தில் ஆலமரம் பல நிழல் தரும் பெரு விருட்சம் நீ அசைக்க முடியா ஓர் உயிர் நீ பூஜ்யம் நீ இல்லையெனில் பயனற்று போகும் பணம் என்னும் காகிதம் ‎ மரணம் அழைக்காமல் வரும் உன்னை அழைக்க தான் மனமில்லை எவருக்கும் ‎ இசை கேட்பவர்களை மெய்மறந்து ரசிக்க வைக்கும் விந்தை மொழி நீ                                                    - தேன்கவி
‎ கேலி: விளையாட்டாய் நண்பர்கள் ஊக்குவிப்பதன் மறுமொழி நீதானோ கானல் நீர் சில நேரங்களில் தோன்றும் கனவும் கானல் நீராகவே மறைகிறது வழி தெரியாமல் காகிதம் வெற்று துணியானாலும் பல வண்ணங்களால் எண்ணங்களால் உயிர் பெறுபவள் நீ வலி எளிதாய் ஒட்டிக்கொள்ளும் உன்னை போராடி தான் துரத்த  வேண்டியிருக்கிறது * பம்பரம்  வாழ்க்கை சுழல்கிறது உன்னை போல்  ‎நிற்கும் நொடி தெரியாமல்                                                 -தேன்கவி  ‎
கடல்: அற்புதம் என்று சொல்லவா அழகு என்று சொல்லவா பிரம்மிப்பு என்று சொல்லவா உன்னை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை கைப்பேசி: உலகையே தன்னுள் அடக்கி மனிதனை வசியம் செய்த மாயக்காரன் நீ கரும்பலகை: உயிரற்ற நீ உயிர் பெற்றாய்  பல ஆயிரம்  மேதைகளை உருவாக்கியதால்  ‎ கொலுசு மழலையின் காலில் இனிய நாதம் நீயே மதுரையை அழிக்க காரணமும் நீயே கூந்தல் வசியம் செய்யும் வசீகர  நாணல் தானோ நீ                                                      -தேன்கவி
கண்ணாமூச்சி: இருண்ட உலகிலும் விரும்பியதை தேட தயங்காதே என உணர்த்தியவள் நீ வயல் வயிறார உணவளித்த உன்னை விலை நிலமாக்கி  வேடிக்கை பார்க்கிறான் அடுத்த தலைமுறையை யோசிக்காமல் ஏணி தூக்கிவிடவும் தோள் கொடுக்கவும்  உன்னைவிட சிறந்த துணை வேறில்லையே கிணறு அள்ள அள்ள குறையாத அமிர்தசுரபி கூட தோற்றுப் போகும் உன் வற்றாத ஊற்று முன் கோழி விழித்தெழு மனிதா பொழுது விடிந்தது தேடலை தொடங்கு எனும் மணியோசை நீ
கடவுள் கண்ணுக்கு தெரியாமல் நிற்பவனல்ல ஒவ்வொரு துளி இரக்கத்திலும் உயிர் வாழ்பவன் தமிழ் அரிதும் பெரிதும் படைத்து அழியாமல் காக்கும் அற்புதம் நீ வண்ணம் ஏழு வண்ணங்களும் எண்ணங்களை அழகாக்கும் மாய லீலை என்னவோ நெடுஞ்சாலை  ஆர்ப்பரிக்கும் சத்ததிலும் அமைதியாய் ஊர் சுற்றும் இன்ப பயணம் மௌனம் புரிந்துகொள்ள முயன்றால் பிடித்தவரின் மௌனம் கூட இசை தான்
தலையணை அன்னை மடியில் இறக்கும் பாரங்களை பல நேரங்களில்  சுமப்பவள் நீ காகிதம் என் ஒவ்வொரு கிறுக்கல்களையும் சுமக்கும் நீயும் ஓர் அன்னை தான் புன்னகை எதிர்பார்ப்பு இல்லாமல் ஒவ்வொருவரும் அளிக்கும் விலையுயர்ந்த பரிசு கனவு இலவசமாக செல்லும் ஓர் இன்ப சுற்றுலா கலைத்திட மனமில்லாமல் சிலர் கண் அழகாய் அனைத்தையும் ரசிக்கும் உன்னையே உயிராய் பார்க்கிறது ஓவியம்                                                           - தேன்கவி
  பசி : ஆடம்பரமாக உண்டு வீணாக்கும் உணவு இன்னொருவனின் பல நாள் பசி கலை : மறைந்து போன மாயைகளை வெளிபடுத்துவது தான் உந்தன் அழகோ புல்லாங்குழல் : பல துளைகளுடன் இனிது ஒலிக்கும் உன்னை பார்க்கும் போது தான் வாழ்க்கை புரிகிறது நிலா : வெண்ணிற ஆடையில் இருட்டை அழகுபடுத்த வந்த ஓர் பேரொளி புரவி : ஓடும் வாழ்க்கையும் உன்னைபோல ஓடுகிறது முன்பின் தெரியாமல்
அமைதி ஆர்பரிக்கும் ஆழ்மனதும் உன்னை தேடி அழைகிறது நித்தம் என்னோடு இருக்க மாட்டாயா என சந்தோஷம் கேட்காமல் கிடைத்த உன்னை அனுபவிக்க மனமில்லாமல் ஓடும் ஓட்டம் தான் வாழ்க்கை உயிர் : எங்கே ஒளிந்திருக்கிறாய் என தெரியவில்லை ஆனால் உன் ஒப்புமை தான் சிறந்தது வலிமை பல ஏமாற்றங்களை கடந்த பிறகுதான் உன்னை மனதார ஏற்க முடிகிறது புதுமை ஏற்றுக்கொள்ள மனமிருந்தால் நீயும் தானாய் ஒட்டிக்கொள்ளும் இன்பமே
மனம் கரைபுரண்டு ஓடும் வெள்ளமும் கட்டுக்குள் வரும் நீ ஏன் வர தயங்குகிறாய் காற்று அழகாய் நீ  தீண்டும் நேரத்தில் இலகுவாகும் மனது ஏங்குகிறது உன்னை மீண்டும் மீண்டும் காண கைவிரல் என்னவள் அன்று என் கை பிடித்து எழுதியது இன்று விளையாடுகிறது தொழில்நுட்ப கருவியில் தனிமை உன்னை உனக்கே புரியவைக்க கிடைத்த ஓர் அருமையான வாய்ப்பு உறக்கம் அலைந்த உடலும் அலுத்த மனமும் சிமிட்டும் இமைகளும் இளைப்பாறிய தருணம்
மழை: ஏங்கவைக்கிறாய் உன்னை காண மகிழவைக்கிறாய் உன்னை கண்டதும் சேமிக்க ஏனோ மனம்தர தயங்குகிறாய் குழந்தை : ஒற்றை புன்னகையில் உலகையே தன்வசம் செய்யும் மாயாஜால சக்தி நீ நிழல் :  ‎உன் அருமையை உரக்க சொல்லிவிட்டு செல்கிறது  சுட்டெரிக்கும் சூரியனின் கோபம் பூ : குழந்தை வளரும் விதமாய் நீயும் வளர்ந்தாய் மொட்டாய் பூவாய் புவியை அழகாக்க வளையல் : அமைதியான ஓர் ஓசையில் ஆயிரம் மொழி யதார்த்த வாழ்க்கையின் வளைவுகளை உணர்த்த
விளையாட்டு : ஒரு நொடியில் தவறவிட்டவனுக்கு மட்டுமே புரியும் அது அவன் வாழ்க்கை என்று நாட்காட்டி : ஒவ்வொரு நாளும்  உன்னை கிழித்து காயபடுத்தினாலும் ஏதோ புதிதாய் கற்றுக்கொள்ள வழிகாட்டும் உன் வாசகங்கள் புகைப்படம் : சேமிக்கிறேன் உன்னை ஞாபகங்களாக அல்ல என் அடுத்த தலைமுறைக்கு நீ மட்டுமே சொந்தம் ஆவதால் சிலை :  ‎உன்னை காணும் போதெல்லாம் ஆயிரம் மௌன மொழி பேசுகிறாய் புரிந்து கொள்ள முடியாமல் நகர்ந்து செல்கிறேன் மாற்றம்: அழைக்கலாம் அடிக்கடி நம் வாழ்வில் வரும் ஓர் அரிய விருந்தாளி
கப்பல் : தடைகளை எதிர்த்து போராடும் உன் வல்லமைக்கு மனிதர்கள் தோற்றுதான் போக வேண்டும் பறவை : தேவைகளின் தேடலில் இடமறியாமல் இன்பமாய் பயணிக்கும் உன்னை கண்டு பொறாமை கொள்கின்றனர் மனிதர்கள். உரிமை : கேட்காமல் எடுத்த காலம் கடந்து போராடி பெற வேண்டியிருக்கிறது உன்னை தேனீ : தனிமையின் பலமும் ஒற்றுமையின் வலிமையும் உணர்த்திய சிறு உயிரினம் நீ. வார்த்தை :  உணர்வுகளை உயிராய் வெளிப்படுத்தும்  ‎ஓர் மெல்லிய குரல்.                                                        -தேன்கவி
வாழ்க்கை: அவரவர் கையில் உள்ள நூல்பொம்மை ஆட்டிவைப்பதும் ஆடுவதும் அவரவர் விருப்பமே பட்டாம்பூச்சி: அழகாய் சொல்லும் பாடம் இன்பமாக சுற்ற நான் பட்ட போராட்டங்கள் எத்தனை எத்தனையோ சிலை:  ‎உன்னை காணும் போதெல்லாம் ஆயிரம் மௌன மொழி பேசுகிறாய் புரிந்து கொள்ள முடியாமல் நகர்ந்து செல்கிறேன்  ‎  ‎ நிழல்:  ‎உன் அருமையை உரக்க சொல்லிவிட்டு செல்கிறது  சுட்டெரிக்கும் சூரியனின் கோபம் எதிர்பார்ப்பு : உன்னை அன்றி ஒரு ஜீவனும் எதார்த்தமாய் வாழ வழி ஏது நாணயம் : உன்னை கண்டதும் தன்னையே மறந்துவிடும் மனிதர்களுக்கு இடையே உன் பெயர் நாணயம் வில்-அம்பு : அற்புத  படைப்பு நான் (வில்) வளைந்தாலும் என்னை நம்பிய உன்னை(அம்பு) நேராக செயல்படுத்துவேன்                                                   -தேன்கவி
கருவறை :  ஒருமுறை இறங்கிய பின் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை அனைத்து தேவைகளும் கேட்காமல் கிடைத்த ஓர் இடம். சோதனை : உன்னில் உள்ள இரண்டை(சோ) அகந்தை   தன்னலம் நீக்கினால் நீயே சாதனை புரிவாய். அம்மா : வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கண்முன் தோன்றிய கடவுள்                                                 -தேன்கவி