விளையாட்டு
சிறுவயதாய் இருக்கையிலே
சுற்றி திரிந்த விளையாடிய நாட்கள்
பக்கத்து வீட்டு அத்தை பிள்ளையும்
எதிர் வீட்டு மாமன் பிள்ளையும்
உடன்பிறந்தவர்களாய் மாறிய
காலம் அது
அழகாய் மணலில் கோடு வரைந்து
விளையாடிய நொண்டி எங்கே
அடிக்கடி நான் வென்றேன் நீ தோற்றாய்
எனேம் ஓசை எங்கே
வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ள
பழகிய காலம் அது
ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம்
இல்லை
ஒன்றாய் சுற்றிய நினைவுகள் எங்கே
குனிந்து தாவிய பச்சை குதிரை எங்கே
மட்டைப்பந்தை தோற்கடித்கும்
கிட்டி எங்கே
குறிவைத்து அடிக்கும் கோலி எங்கே
மகிழ்வாய் கண்ணாமூச்சி ஆடிய காலம் எங்கே
கணக்கு கற்றுத்தரும் பல்லாங்குழி எங்கே
தொலைத்த இவை அனைத்தும்
கனவாய் துரத்துகிறாய்
மீண்டும் கிராம வாழ்க்கையை நோக்கி ஓடு என்று
நீ மகிழ்ந்த விளையாட்டுகளை
உறவுகளை
நீ சேமிக்கும் பணத்திற்காய்
தொலைத்தது உன் அடுத்த தலைமுறை
அனைத்தும் சேமிக்கிறாய் பணத்தால்
உறவு பந்தம் பாசம்
இவை அனைத்துமே இழுந்து
கை அகல கைபேசியில்
வாழ்க்கையை தொலைத்து
படங்களாக சேமிக்கும் ஞாபகங்களை
உணர்வுகளாக சேமித்து வை
இதை அன்றி வேறு சொத்து
ஏது...
-தேன்கவி
Comments
Post a Comment