Posts

Showing posts from August, 2018
பாசம் மழை மண்ணில் விழ மனம் வீசும் மண்  உணர்த்தியது பாசம்... காற்று வீசும் வேளையில் மெல்ல தலை அசைக்கும் மரக் கிளைகள் உணர்த்தியது பாசம்.. கருமேகம் கண்ட மயில் தோகை விரித்து ஆடி உணர்த்தியது பாசம்.. பொழியும் பௌர்ணமி நிலவும் பூமியின் மேல் படுவது உணர்த்தியது பாசம்... குயிலின் கீதம் இசையாய் மாறி மனிதர்களை மகிழ்விப்பது உணர்த்தியது பாசம்.. மலர்ந்த மலரும் தேன் எடுக்கும் வண்டு இடம் கொண்டது பாசம்.. முகம் பார்த்து குரல் கேட்டு மனதை படிக்கும் அன்னை கொண்டது பாசம்.. தூரம் நின்றாலும் உலகமாய் நம்மையே நினைக்கும் தந்தை கொண்டது பாசம்.. அகில அண்டத்தையும் ஆட்டுவிக்கும் மாய சக்தி தான் பாசமோ..                                                      -தேன்கவி
இயந்திர வாழ்க்கை ஓடி அழுத்த ஓட்டத்தில் திரும்பி பார்க்க வைக்கும் சில நினைவுகள்.. குருவி கூடாய் ஓர் வீடு இருக்க.. கூட்டாஞ்சோறாய் உணவு சமைக்க.. அன்பு அமுதாய் அம்மா கையின் ஒரு பிடியும் வயிறு நிறைக்க.. அழகாய் கழித்த காலமும் கடக்க.. தேவையை தேடி பயணம் தொடர தொலைந்து தான் போனது இன்பம்.. பட்டாம்பூச்சியாய் சுற்றினாலும் கூடு திரும்ப நேரமில்லை.. பார்க்கும் கண்களுக்கு மகிழ்ச்சியாய் தெரிந்தாலும் மனகுமுறல் சொல்ல வார்த்தையில்லை.. தேடி தேடி சேர்த்தாலும் அனுபவிக்க ஆசையில்லை.. ஓய்ந்து திரும்பி பார்க்கையில் ஓடியது ஒன்றும் இல்லை.. கண் அயரும் வேளையில் கதை கேட்க ஆள் இல்லை.. விரட்ட வைக்கும் பணம் வேண்டாம்.. துரத்த வைக்கும் சோதனை வேண்டாம்.. ஓட வைக்கும் நோய் வேண்டாம்.. சிரிக்க வைக்கும் வாழ்க்கை வேண்டும்.. சுற்றி இருக்க சொந்தம் வேண்டும்..                                                 -தேன்கவி
சொந்தம் துணை தேடும் விழிக்கு இமைகள் சொந்தம் தானோ.. கடந்து செல்லும் நாட்களுக்கு நேரம் சொந்தம் தானோ.. விடை அறியா வாழ்க்கைக்கு கேள்விகள் சொந்தம் தானோ.. துரத்தி செல்லும் வண்டிக்கு பாதை சொந்தம் தானோ.‌.. துளியாய் வழியும் விழிநீர் கண்ணுக்கு சொந்தம் தானோ.. வீசும் தென்றல் காற்றும் பூமிக்கு சொந்தம் தானோ.. எழுதும் கிறுக்கல்களும் காகிதத்திற்கு சொந்தம் தானோ.. ‍‌‌சொல்லிய சொல்லும் நாவிற்கு சொந்தம் தானோ.. தொடர்பு இருந்தும் உரிமை இல்லாத ஏதும் ஒருவருக்கு சொந்தம் தானோ.. வலி அறிந்து விடை சொல்லும் ஆறுதலும் யாருக்கு சொந்தமோ.. கேள்விகளாய் நகர்கிறது எண்ணங்கள்..                                                         -தேன்கவி
ஓட்டம் ஓடி வெல்ல ஓர் குதிரை பந்தயம் ஆனது வாழ்க்கை.. கவனம் மாறாமல் ஓட கடிவாளமாய் ஓர் கனவு.. இலக்கை நோக்கினாலும் விலகி தான் தெரிகிறது கண்முன்.. தூரம் சென்றாலும் கால்களின் ஓட்டம் குறைவதே இல்லை.. முடிவை தேடி தொடரும் பயணத்தில் முடிந்து போகிறது வாழ்க்கை ஓட்டம்.. உடன் ஓடுவது திரும்பி பார்க்க நேரமில்லாத நிலையில்.. ஆணி அரைந்த கால்களோடும் திசை திரும்பா கண்களோடும் இலக்கின் எல்லை தெரியாமல் ஓடும் குதிரையாய் ஓடுகிறது வாழ்க்கை..                                           -தேன்கவி
விளையாட்டு சிறுவயதாய் இருக்கையிலே சுற்றி திரிந்த விளையாடிய நாட்கள் பக்கத்து வீட்டு அத்தை பிள்ளையும் எதிர் வீட்டு மாமன் பிள்ளையும் உடன்பிறந்தவர்களாய் மாறிய காலம் அது அழகாய் மணலில் கோடு வரைந்து விளையாடிய நொண்டி எங்கே அடிக்கடி நான் வென்றேன் நீ தோற்றாய் எனேம் ஓசை எங்கே வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ள பழகிய காலம் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இல்லை ஒன்றாய் சுற்றிய நினைவுகள் எங்கே குனிந்து தாவிய பச்சை குதிரை எங்கே மட்டைப்பந்தை தோற்கடித்கும் கிட்டி எங்கே குறிவைத்து அடிக்கும் கோலி எங்கே மகிழ்வாய் கண்ணாமூச்சி ஆடிய காலம் எங்கே கணக்கு கற்றுத்தரும் பல்லாங்குழி எங்கே தொலைத்த இவை அனைத்தும் கனவாய் துரத்துகிறாய் மீண்டும் கிராம வாழ்க்கையை நோக்கி ஓடு என்று நீ மகிழ்ந்த விளையாட்டுகளை உறவுகளை நீ சேமிக்கும் பணத்திற்காய் தொலைத்தது உன் அடுத்த தலைமுறை அனைத்தும் சேமிக்கிறாய் பணத்தால் உறவு பந்தம் பாசம் இவை அனைத்துமே இழுந்து கை அகல கைபேசியில் வாழ்க்கையை தொலைத்து படங்களாக சேமிக்கும் ஞாபகங்களை உணர்வுகளாக சேமித்து வை இதை அன்றி வேறு சொத்து ஏது...         ...
என் கனவு விடியாத இரவு ஒன்று வேண்டும் கனவுகளில் தொலைந்திடாத வாழ்க்கை வேண்டும் ஆரவாரம் இல்லாத ஓர் அமைதி வேண்டும் விடிந்ததும் புதிதாக பிறந்த உணர்வு வேண்டும் தவறை மறக்கும் சக்தி வேண்டும் துரோகம் தாங்கிக் கொள்ள வலிமை வேண்டும் எதிர்பார்ப்பு இல்லாத எண்ணம் வேண்டும் கடமையை செய்ய மன உறுதி வேண்டும் தனிமையை ரசிக்கும் தைரியம் வேண்டும் துரத்தி ஓட இலட்சியம் வேண்டும் தூரம் நின்று ரசிக்கும் வாழ்க்கை வேண்டும் மழலையாய் மாறி வாழ வேண்டும் கண்ணீரை எதிர்க்கும் துணிச்சல் வேண்டும் போர்க்களமாய் இருக்கும் வாழ்க்கையில் அமைதி வேண்டும் இவை அனைத்தும் தோற்றுப் போனாலும் என்னை நானே செதுக்கும் உளியாக வேண்டும்....                                              -தேன்கவி
ஆசை கரை தழுவும் கடல்அலையாய்.. எட்டி பிடிக்கும் விண்மீனாய்.. சுற்றி பறக்கும் பட்டாம்பூச்சியாய்.. வானில் உலவும் மேகங்களாய்.. காற்றில் அசையும் கிளைகளாய்.. மரத்தில் உதிரும் இலைகளாய்.. இரவில் உலவும் கனவுகளாய்.. மாறி வரும் எண்ணங்களாய்.. நீரில் தத்தளிக்கும் பறவைகளாய்.. ஏது இதில் வாழ்க்கை என தெரியாமலே நகர்கிறதே..                                                 -தேன்கவி
பழங்காலம் கண் இரண்டும் ஏங்குது கனவாய் தொலைத்திடும் பயத்தில்.. விழித்துக்கொள்ள முடியாமல் துரத்துகிறது.. தேவைகள் அனைத்தும் கனவில் நிறைவேற.. காசு பணம் தேவையில்லை பாசமா பேச வார்த்தை இல்லை.. அழும் குழந்தைக்கு ஆறுதல் சொல்ல நேரமில்லை... ஒரு வாய் சோறு அம்மா கையில் வங்க ஏங்கியதில்லை.. அலைந்து கலைத்து வந்தாலும் அப்பா கைபிடித்து சுற்ற மறந்ததில்லை.. ஆயிரம் சண்டை எங்களுக்குள் வாந்தாலும் உடன்பிறப்பை என்றும் விட்டுக்கொடுத்ததில்லை... உறவுகளாய் சேர்ந்து கோடை விடுமுறையை கொண்டாடிய காலம் எங்கே.. ஊரெங்கும் பசுமையாய் தெரியும் வயல்வெளி எங்கே.. கிராம வாழ்க்கையை தொலைத்து நகரத்தில் பூட்டி வைக்கபடும் நிலை இங்கே.. சொந்தம் பந்தம் ஏதும் இல்லை பக்கத்து வீட்டுகாரனையும் தெரியவில்லை... ஒரு குழந்தை இருந்தும் பாசம் காட்ட நேரமில்லை.. உனக்கு சேமிக்க ஓடுவதாய் உன்னையே தொலைக்கும் நிலை எங்கே.. கண்முன்னே கடவுள் வந்தால் அழகாய் பழங்கால வாழ்க்கை கேட்பேன்.. ஒருநாள் வாழ்க்கையும் பலநாள் நிறைவுதரும் என்பேன்..                         ...
மனமே   எத்தனை முறை தேற்றினாலும் தோற்றுப் போகிறது மனம்.. சொல்ல வார்த்தைகள் தேடி சொல்ல நினைக்கும் முன் கண்ணீராய் பேசுகிறாய் மனமே.. அடைமழையும் அடைந்து போக ஆரவாரமாக ஆர்ப்பரிக்கும் மனமே.. ஆயிரம் முறை சமாதானமும் அரைநொடியில் கரைக்கும் மனமே.. உன்னை அமைதியாக்க இறப்பு ஒன்று தான் தீர்வோ மனமே.. கண் இமை மூடினாலும் உன் எண்ணங்கள் தூங்காதோ மனமே.. நேசிக்கும் அனைத்தும் உன்னை ஓய்வில்லாமல் செய்கிறதோ மனமே.. பம்பரமாய் சுழன்றாலும் வாழ்க்கை உன்னிடம் எதிர்பார்கிறதோ மனமே.. ஆயிரம் யோசனைகள் இருந்தாலும் என்றும் மகிழ்வாய் மனமே!!                                        -தேன்கவி
நண்பனுக்கு எட்டிப்பிடிக்கும் விண்மீனாய் ஏற்றத்தில் ஏணியாய் உயரத்தில் மலையாய் சிரிக்கும் சிகரமாய் முன்னேற்றம் உன் தோழனாக புன்னகை நீபெறும் செல்வமாக வானலவு மென்மேலும் உயர வாழ்த்துக்கள் உயிர் நண்பா வெற்றி வாகை சூடி வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைக்கு பயணிக்க கடவுள் உன்னோடு இருக்க வேண்டுகிறேன்..                                          -தேன்கவி
முதுமை நினைவு நினைத்து மகிழ நினைவு ஒன்று.. அழகாய் துள்ளிய காலம் ஒன்று.. சிட்டாய் பறந்த சிறகு ஒன்று.. சுயமாய் யோசித்த காலம் ஒன்று.. ஆடி திரிந்த நாட்கள் ஒன்று.. ஓடி ஆரம்பித்த நிலை ஒன்று.. ஓயாத அலையாய் கனவு ஒன்று.. பிடித்து மகிழும் காலம் ஒன்று.. வெறுத்தாலும் துரத்தும் நாட்கள் ஒன்று.. வாழ்வில் பாதி ஏக்கத்தில் ஒன்று.. அலைந்த அலுப்பிற்கு ஓய்வு ஒன்று.. அமைதியாய் யோசித்தால் சிரிக்கவைக்கும் ஒன்று.. பலன் இல்லையே எனும் ஏக்கத்தில் மகிழ்ச்சி தரும் நினைவு உண்டு- முதுமையில்                       ‌‌‌                    -தேன்கவி
நட்பு உணர நினைத்தால் ஒட்டி கொள்கிறாய்.. பிடிக்க நினைத்தால் அசைத்து செல்கிறாய்.. தூரம் நின்றால் பார்த்து சிரிக்கிறாய்.. அருகில் வந்தால் முகத்தில் அடிக்கிறாய்.. சுவசமாய் நினைத்தால் திணற வைக்கிறாய்.. காணவில்லை ஏங்கினால் ஓடோடி வருகிறாய்.. கட்டிதழுவ எண்ணினால் விலகி ஓடுகிறாய்.. புரிந்துகொள்ள நினைத்தால் புதிர் ஆகிறாய்.. ஏங்கும் மனதிற்கு ஏக்கம் தருகிறாய்.. அழும் கண்ணீருக்கு ஆறுதல் ஆகிறாய்.. உடன் விளையாடும் மழலை ஆகிறாய்.. நேசிக்கும் உறவுகளும் உன்னை போல சுவாசிக்கும் காற்றாகிறது...                                           தேன்கவி
வாழ்வு கால்களின் வேகத்தை மிஞ்சிய ஓட்டம் திரும்பி பார்க்க நேரம் இல்லை.. உடன் இருக்கும் அனைத்தும் தொலைவாய் தெரியும் நேரம்.. கண்சிமிட்டும் நேரத்தில் மாறும் மாமனிதர்கள்.. எளிதாக கடந்து செல்லும் அழகிய உறவுகள்.. ஏக்கத்தில் தவிக்கும் மனம் மாற தடுமாறும் மாயம்.. பூகம்பத்தை விட பெரிய போராட்டம் மனதில்.. கண்முன்னே காணும் மாற்றத்தை கண்ணீராய் வெளியிடும் மனம்.. முன்பு போல் இல்லையே தவிக்கிறது மனது.. ஆறுதல் கூற ஆளில்லாமல் கவலையும் சிரிப்பாய் மாற வழி இல்லாமல் வாழ்க்கை.. தொலைந்தது எது என தெரியும் முன் முடியும் வாழ்க்கை.. சேமிக்க நினைக்கிறேன் உண்மையாய் உயிராய் இருக்கும் ஓர் உறவை உயிராய் மனம் நினைக்க நினைக்கும் நொடியில் மகிழ்ச்சி எழ ரசிக்க வைக்கிறது வாழ்க்கை.. எவ்வளவு ஓடினாலும் மனம் எதிர்பார்ப்பது பாசத்தை மட்டுமே..                                               தேன்கவி
அழகு தேய்ந்து வளரும் நிலவும் ஓர் அழகு.. புல்லின் மேல் பனித்துளியும் ஓர் அழகு.. அசையும் கிளையில் உதிரும் இலையும் ஓர் அழகு.. பாறையில் முளைக்கும் செடியும் ஓர் அழகு.. ஆனந்தமாய் வரும் கண்ணீரும் ஓர் அழகு.. தொட்டதும் சுருங்கும் தொட்டாசிணுங்கியும் ஓர் அழகு.. ஏங்கும் நாட்களில் எதிர்பார்க்கும் கண்களும் ஓர் அழகு.. மெல்லிய இரைச்சலிடும் ஓடைநீரும் ஓர் அழகு.. ஆயிரம் ரசனைகளை அழகாய் வெளிப்படுத்தும் வார்த்தைகளும் ஓர் அழகு..                                         தேன்கவி
கிறுக்கல்கள் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் கதை சொல்கிறது.. ஆயிரம் சோகம் ஆயிரம் இன்பம் அனைத்தும் மனதை உருகுலைக்க.. சொல்ல வாயும் வரவில்லை.. அழ கண்ணீரும் கண்ணில் இல்லை.. சிரிக்கும் நேரத்தில் சத்தம் கூட‌ கேட்டதில்லை.. மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க மனம் கூட வரவில்லை.. விதியின் விளையாட்டில் கைபொம்மைகளாய்.. எதிர்பார்ப்போடு ஏங்கும் அற்ப உயிராய்.. இரவில் உலாவும் தனி ஆசைகளாய்.. தொலைக்க ஏங்கும் நிறைவேறா கனவுகளாய்.. ரசிக்க நினைக்கும் தனிமை நிமிடங்களாய்.. பச்சோந்தியிடம் தோற்றுப் போகும் மனித குணமாய்.. முடிவில்லா நிகழ்வுகளாய் எவற்றை கிறுக்க வார்த்தை தேடுவேன் நான்!!                                        தேன்கவி