தாகம் பசித்து புசிக்க வைக்ககிறாய் அது அறிவோ அல்ல உணவோ இரண்டையும் கரை அழகாய் விளையாடும் அலையாவேன் உன் முன் நான் நூலிழை தப்பி பிழைக்கும் ஒவ்வொருவரும் உணர்ந்த ஓர் வார்த்தை நீ பருவம் மாறும் மனிதர்களும் உன்னை போல தான் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுகின்றனர் தடை சாதிக்க நினைக்கும் அனைவரும் உன்னை தோற்கடித்து தான் செல்ல வேண்டும் -தேன்கவி
Posts
Showing posts from June, 2018
- Get link
- X
- Other Apps
கொடை கொடுத்து பழகிய உள்ளங்களால் கொடை ஆனாயோ கொடுக்க ஏங்கும் கைகளால் ஆனாயோ வள்ளல் வாரி வழங்கும் உன்னை அன்றும் இன்றும் என்றும் பாரி உருவில் மட்டுமே காண்கிறேன் விரல் குழந்தையாய் வருடிய தருணம் கைபிடித்து நடை பழகிய தருணம் கைகோர்த்து சென்ற தருணம் உன்னாலோ நடை தூரம் தேடி பயணிக்கிறேன் துணையாய் நீ இருப்பாய் எனும் ஏக்கத்தில் தேர்வு என்னை நிருபிக்க உன்னை தேடி அலைகிறேன் வழி தெரியாமல் -தேன்கவி
- Get link
- X
- Other Apps
தச்சன் அழகாய் வடிவமைக்கும் உன் கையில் உள்ள மாய சக்தி தான் என்னவோ ஆணி சிறு துரும்பு தான் பெரிய பொருள்களை தாங்கும் அற்புதம் நீ ஆண்டு வளர்ந்து கொண்டே இருக்கும் நீயோ வயதானவளாய் காட்சியளிக்கும் மாயம் என்னவோ நடனம் வளைந்து நெளிந்து அசைந்து மகிழ வைக்கும் இனிய கலை நீ குடை மழையின் பகைவன் நீ ரசிக்க ஏங்கும் போது தடுக்கும் விந்தை என்னவோ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
ஓடம் அடிக்கும் காற்றும் அசையும் அலையும் மெல்ல மெல்ல நகர வைக்கும் பயணம் நீ படம் ஒரு சிறு புள்ளியில் தொடங்கிய நீ பெரிதாய் உருமாறும் மாயம் என்னவோ பழம் சுவையூட்டும் விருந்தாக இருக்கும் நீயோ ஏதும் அறியா மனிதனின் ஒப்புமை ஆனாயோ பலம் உன் உறுதுணை இன்றி சிறுதுரும்பையும் ஆசைக்க முடியுமோ நாற்காலி உயரத்தில் அமர்ந்து உலகை ஆள உன் கால்களை தரையில் கிடக்க வைக்கிறாயோ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
துயரம் இன்பத்தின் நண்பன் நீ ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் நாம் சாளரம் உன்னை அன்றி அனைத்தும் இருட்டு தான் சிறிய துவாரம் வழியாக காண வைக்கிறாய் பெரிய உலகத்தை தாழ்பாள் பெரிய நிகழ்வுகளை மறைக்கும் சிறிய துரும்பு நீ தானோ அறியாமை தெரிந்தே நடிக்கும் உலகின் நடுவில் அரியாமல் இருக்கும் பேதை நீ தாடி பெண்ணின் கூந்தலின் அழகிய குழவி நீ கூந்தலின் துணையாய் இருக்கும் கள்வன் நீ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
வெட்கம் * பெண்களுக்காக படைக்கபட்ட நீயும் அழகிய மழலை தானோ வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நீராய் கதையில் கேட்டேன் இன்று குடிநீராய் வர வழியில்லையோ பிரிவு வாழ்க்கை போராட்டத்தில் உன்னை அடைய வேண்டாம் எனும் போராட்டம் பெரிது வெளிச்சம் இருட்டில் இருக்கும் அனைத்தும் இருண்டு போகும் என நீ வந்தாயோ துறவரம் வாழ்க்கையே வேண்டாம் என உன்னை தழுவியவனும் வாழ தான் ஆசைபடுகிறான் -தேன்கவி
- Get link
- X
- Other Apps
தண்டனை தவறு என்று தெரிந்தே செய்தாலும் உன்னை ஏற்க மனமில்லை எவருக்கும் நெகிழ்ச்சி எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம் நீ முடிவு தெளிவாக உன்னை அடைய முடியாமல் தத்தளிக்கும் மனித மனம் நெஞ்சம் மனிதர்களுக்குள் இருக்கும் ஓர் பெரிய நீதிமன்றம் நீ துயரம் தேடாமல் கிடைக்கும் உன்னை தொலைத்தால் இன்பம் தேடி வரும் -தேன்கவி
- Get link
- X
- Other Apps
அழகு பார்த்த உடன் வசியம் செய்வது நீதானே அல்ல பழகிய பின் வசியம் செய்வது நீயோ உணர்வு வாழ்க்கை அழகாக நகர்கிறது தெரிந்தே உன்னை சில சமயங்களில் கொன்று மகிழ்ச்சி உன்னை அடைய போராடியும் எவரிடமும் நிலைக்காமல் விளையாடுகிறாய் நீ சுகம் தொடரும் அனைத்தும் உன்னை தீண்டவும் முடிவில் உன்னுடன் முடியவே ஏங்குகிறது அறிவு அகிலமும் அரண்டு போகும் உன்னை கண்முன் கண்டதும் -தேன்கவி
- Get link
- X
- Other Apps
தொண்டு தனக்கென சேர்த்து வைக்கவே நேரம் இல்லா மனிதர்களுக்கு உன்னை நினைக்க மனமேது பரிசு தகுதிக்கு கிடைத்த வெகுமதியாய் கருதுவதா அல்ல விலைக்கு கிடைத்த பொருளாய் கருதுவதா உன்னை காதணி தொட்டிலில் ஆடும் மழலையாய் மங்கையர் காதில் ஆடும் அழகு என்னவோ காரணம் உன்பின் தான் உலகமே சுழல்கிறது செய்யும் தவறுகளை மறைக்க சமையல் போதும் என்ற மனம் கொடுக்கும் ஓர் அற்புத கலை நீ தேன்கவி
- Get link
- X
- Other Apps
மின்னல் நொடி பொழுதில் மறையும் உனக்கு கண்ணை மறைக்கும் சக்தி என்னவோ காந்தம் உன்னை போல் ஈர்க்கும் சக்தி இருந்தால் உலகமே ஒரு கைக்குட்டையில் அடங்கும் சத்தம் மௌனம் எனும் அழகிய மாயானம் ஒலியாய் உருப்பெற்றது உன்னால் சத்தியம் எளிதில் ஏற்றுக்கொள்ளும் உன்னை காப்பாற்ற முடியாமல் தத்தளிக்க வைப்பது ஏனோ தொட்டில் அன்னை மடியின் சுகம் கண்டேன் உன்னில் ஆயிரம் அசைவுக்கு மத்தியில் -தேன்கவி
- Get link
- X
- Other Apps
ஊடுருவி ஒளியும் ஒலியும் ஊடுருவலாம் ஆனால் ஒருவரின் மனதை ஊடுருவது மலையினும் கடினமே காற்று அகிலம் எங்கும் கலந்திருக்கும் உன்னை வர்ணிக்க வார்த்தை தெரியவில்லை பிரபலம் உன் பெயரை எட்டி பிடிக்க வாழ்க்கையில் ஓடும் மனிதர்களின் ஓட்டத்திற்கு முடிவில்லை மூச்சு சுவாசிக்க கிடைத்த உன்னை நேசிக்கவும் வைக்கிறாய் உயிராய் சொத்து நிலையில்லா உன்னை அடைய ஏங்கும் மனிதர்களுக்கு ஏனோ நிலையானதை தேட மனமில்லையோ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
தேன் உன் இனிமையை ஒப்பிட வரையறையே இல்லை அனைத்து இனிமையிலும் நிறைந்தவள் நீ தூரல் மெல்லிய உன் சலசலப்பு ஓசையும் சிலருக்கு கீதம் சிலருக்கு உயிர் உன்னை காண ஏங்கி தவமிருக்கும் மக்களுக்கு நீயும் ஓர் அழகிய மழலையே மேகம் உன் வெண்ணிற ஆடையில் வானத்தின் வெட்கத்தை மறைக்கும் அழகு என்னவோ வணக்கம் அன்னியர்கள் விரட்டி அடித்த ஓர் அழகிய தமிழ் வரவேற்பு வார்த்தை பணயம் சூழ்ச்சிக்கு வித்து நீதானோ சூதாட வைக்கும் போதையும் நீதானோ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
சொல் வீசப்பட்ட அரிவாளை விட கூர்மையான ஆயுதம் நீ பார்த்து எறிய வேண்டும் மற்றவர்கள் மீது பலா கடந்து செல்லும் வாழ்க்கையோ முட்களாய் தித்திக்கும் தேனாய் என்று மறுமோ பார்க்கும் போதெல்லாம் நினைக்க வைக்கிறாய் நீ.. புறா தூதாய் நீ சென்ற காலம் கடந்து உன்னை தேடி அலையும் காலம் விதி வலியது தான் இதயதுடிப்பு உன் ஓசையை கீதமாக நினைத்து வாழும் பத்து மாதங்களும் ஓர் அழகிய தவமே வட்டம் ஓடும் வாழ்க்கையும் ஓர் வட்டம் தான் தொடங்கிய இடத்தில் முடியும் என தெரியாமல் ஓடுகிறோம் -தேன்கவி
- Get link
- X
- Other Apps
படம் பார்த்ததும் படித்து விட முடிந்த அழகிய ஓவியங்கள் நீ பலம் நீ உடனிருந்தால் துணிவுக்கும் ஆற்றலுக்கும் பஞ்சம் ஏது வாழை அடி முதல் நுனி வரை உன்னை போன்று பயனுள்ள உயிரினம் உலகில் ஏது பணம் தேவைகளை கடந்து சேர்த்து வைக்க நினைக்க வைக்கும் உலகையே ஆட்டி வைக்கும் மாயம் நீ அக்கறை உன் துணை இன்றி ஓர் அணுவும் அசையாதத அற்புதம் தான் வாழ்க்கை -தேன்கவி
- Get link
- X
- Other Apps
அன்னம் * உன்னை வீணாக்கும் சிலர் நீ கிடைக்கவில்லையே என ஏங்கும் சிலர் கடவுளின் ஓரவஞ்சனை தான் என்னவோ இமயம் உன்னை தொட பல ஆயிரம் கடினங்களை கடந்து செல்ல வேண்டும் சந்தோஷம் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு வகையான சந்தோஷத்தை அளித்து கொண்டு தான் இருக்கிறது மூடத்தனம் நிறைவாய் இல்லாத வாழ்க்கையே என ஏங்குக்பவரை தன்னை அறியாமல் ஆட்கொள்ளுவது நீ வரம்பற்ற பாசத்தின் கைகளுக்கு மட்டுமே வரம்புகளை கடக்கிறாயோ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
காளான் பிறந்த சிலநேரங்களில் இறந்து விடுவோம் என தெரிந்தும் சிரித்துக் கொண்டே பிறப்பவள் நீ வரம் தேடி அலையும் பலருக்கு மத்தியில் தேடாமலே சிலர் வென்று விடுகின்றனர் உன்னை ஊர்வலம் மெல்லமாக நகரும் உன்னிடத்தில் ஆயிரம் உறவுகள் ஒன்று சேர்கின்றன வளம் உன்னை வைத்து தான் அனைத்தையும் எடை போடும் உலகம் இது கதவு பெரிய அறைகளுக்கும் சிறிய பாதுகாவலன் நீ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
உணர்வு நீ தோன்றும் சில கணம் மகிழ்ச்சியானாலும் நிஜத்தில் கனவாய் கலைகிறாய் தூக்கம் வேறு உலகிற்கு அழகாய் பயணம் செய்ய வைக்கும் இன்ப சுற்றுலா நீ மாயம் மலரும் நினைவுகளில் சிலவற்றுக்கு மாயமாகும் சக்தி தான் என்னவோ எறும்பு ஒற்றுமைக்கும் உழைப்புக்கும் உன்னிடம் மனிதர்கள் பாடம் கற்க வேண்டும் தகவல் உன்னை சேகரிக்க ஓடும் கூட்டம் ஒன்று எளிதில் அடைந்துவிடும் கூட்டம் ஒன்று -தேன்கவி
- Get link
- X
- Other Apps
கிளி சொல்லுவதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளும் ஒரே அதிசய ஜீவன் நீ சினுங்கல் ஒவ்வொரு சினுங்கலுக்கு ஒவ்வொரு அற்தம் தெரியாமல் சிலர் புரிந்தும் புரியாமல் சிலர் வெகுமதி உன்னை அடைவதற்காகவே வாழ்க்கையின் பந்தயத்தில் பரபரப்பாய் ஓடுகின்றனர் அவரவர்கான நேரமீ வரும் என தெரியாமல் யதார்த்தம் ஒவ்வொரு நொடியும் நொடியும் நடித்து வாழும் உலகில் உன்னை காண்பதே அரிது பாசம் உயிராய் நினைக்க வைக்கும் ஒன்று உயிரில்லா ஜடமாய் ஆக்கும் விந்தை -தேன்கவி
- Get link
- X
- Other Apps
கோயில் மனம் இளைப்பாற தேடிய ஓர் அதிசயம உலகம் போலி வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒருமுறையேனும் உன்னை தழுவிதான் செல்கின்றன தாடி செல்லமாய் வருட நினைக்கும் அழகிய மழலை நீ நடனம் உடல் களைப்பும் மன சோர்வும் நீங்க கிடைத்த பரிசு நீ பழமை புதிதாய் தோன்றும் ஒவ்வொன்றும் உன்னை தோற்கடித்து விடும் சிலருக்கு கிடைக்கும் புதிய அன்பை போல் -தேன்கவி
- Get link
- X
- Other Apps
கிளை பெரிதாய் வளரும் மரமும் சிறிதாக நீண்டுள்ள கிளையை போல் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களும் அப்படியே இலை உயரமாய் வளரும் மரத்திற்கும் அழகு சேர்க்கும் உன்னை போல் வாழ்வின் அழகும் சிறு சந்தோஷங்களே ஊக்கம் உன் ஒருவனை சரணடைந்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் செலவு வாழ்க்கை மிக முக்கிய அலையா விருந்தாளி நீ கேள்வி ஒவ்வொருவரின் மனதில் தோன்றும் எண்ணமும் உன் வடிவில் வெளி வருகின்றன விடை தெரியாமல் சில.. -தேன்கவி
- Get link
- X
- Other Apps
களிறு மெல்லிய உன் அசைவிலும் அம்பாரியாய் ஊர் சுற்றும் அதிசயம் தானோ காகிதம் கிழித்து கசக்கி எறிந்ததை மீண்டும் சரி செய்ய நினைப்பது போல தான் வாழ்க்கையும் பேனா உன்னில் உள்ள மை தான் உன் ஆயுளை தீர்மானிக்கும் சிலருக்கு தன்னில் உள்ள எண்ணங்களை போல நாளிதழ் காகிதமும் மையும் ஒன்றானாலும் உன்னில் அச்சிடபடும் செய்திகள் மட்டும் ஏனோ வேறல்லவே தினமும் மாறும் வாழ்க்கையை போல் மிளகு உருவில் சிறியவனாலும் உன்னை கண்டால் பகைவனே படை நடுங்கும் வித்தை என்னவோ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
வெடி பற்ற வைத்தால் வெடிக்கும் உன்னைபோல் பற்றி எறிய வைக்கிறது மனிதர்களின் சந்தேகங்கள் தீ சுடர்விட்டு எறியும் உன் தூய்மையை ஒப்பிட வார்த்தைகளே இல்லை கடிகாரம் நாள் முழுவதும் ஓயாமல் ஓடும் உன்னை கண்டு வியக்கிறார்கள் மனிதர்கள் ஓலை பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியில் முந்தைய காலத்தில் தோன்றிய வளர்ச்சி நீயோ தரம் உன்னை பரிசோதிக்க நினைக்க மனிதர்கள் தன்னை பரிசோதிக்க தயங்குவது ஏனோ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
சீப்பு வாரிவிடுவதில் நிச்சயம் மனிதர்கள் உன்னிடம் தோற்றுபோவார் நெல்லிக்கனி நட்பின் இலக்கணத்தை உணர்த்த உன்னைவிட அரிய கனி ஏது நிரூபி ஒவ்வொரு செயலிலும் உன்னை அடைய தக்க சமயம் காக்க வேண்டும் போலும் பறை இடி ஓசையை விட வானை தொடும் சக்தி உனக்கு இருக்கும் அற்புதம் ஏனோ * மறுப்பு உன்னை ஏற்க முடியாமல் சிலர் உன்னை ஏற்றும் வெளிபடுத்த முடியாமல் சிலர் வாழ்க்கையின் விந்தை என்னவோ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
பன்னீர் வாசனை மணக்கும் திரவியம் ஆனாலும் அளவுக்கு மீறினால் ஆபத்து தான் பந்தல் இளைபாற இடம் தரும் உன்னை கோயிலாய் காண்கின்றன வெயிலில் வாடும் மக்கள் கல்வெட்டு சரித்திரம் அறிய உன்னை செதுக்கிய முன்னோர்களின் விந்தை என்னவோ வேஷம் விளையாட்டாய் வேடிக்கை பார்த்து ரசித்த ஒன்று விளையாடுகிறது நிஜ வாழ்க்கையில் உன்னால் மெழுகுவர்த்தி தன்னையே உருக்கும் உன்னை நினைத்து உருக மனமில்லாமல் அலைகிறது மனிதர்கள் -தேன்கவி
- Get link
- X
- Other Apps
ஓடம் முற்காலத்தில் ஊர்களை சுற்றிவர உதவிய நீயோ இன்று வேடிக்கை கருவியாக உதவுகிறாயோ தாகம் தேடலின் தொடக்கம் நீயே தேடி அலைந்து கலைத்தாலும் தேட வைப்பதும் நீயே கர்வம் உன்னிடம் சரணடையும் ஒரு நொடியில் தோற்றுப் போகிறது என் அனைத்து நன்மைகளும் வானொலி உலகையே கவரும் ஒரு சிறிய பெட்டியின் இடம் தான் இன்று எங்கே தொலைந்ததோ ஊசி சிறிய கம்பி பெரிய அளவில் தைப்பது போல சிறிய வார்த்தைகளும் நெஞ்சை தைத்து விடுகின்றன -தேன்கவி
- Get link
- X
- Other Apps
மண் எவ்வளவு தான் மனிதர்கள் ஆடினாலும் கடைசியில் சரணடைவது உன்னிடமே மாயம் மறைந்து கொள்ளும் வித்தைக்காரி தேடி அலைந்தும் சிக்காத கெட்டிக்காரி பாகற்காய் கசப்பானாலும் உடலின் நன்மைக்கு தான் அதுபோல தான் வாழ்க்கையும் சிறிது கசப்புகளுடன் தாயம் உன் ஒற்றை உருட்டில் வாழ்க்கையை தீர்மானிக்கும் அழகிய சக்தி என்னவோ சக்கரம் திருமாலின் கையில் சுழலும் நீயும் வாகனங்களின் அடியில் சுழலும் நீயும் வாழ்க்கை சுழற்சியை விளக்கும் விந்தை என்னவோ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
தீபம் சுடர்விட்டு நேர்த்தியாய் எரியும் உன் சக்திக்கு சாந்தமும் கோபமும் உண்டு இருக்கும் இடத்தை பொறுத்து தேர் அசைந்து ஆடி நீ வரும் அழகிற்கு பூமியின் பொறுமை கூட தோற்று போகும் நொடி வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் சக்தி உன் ஒருவனிடம் தான் உண்டோ பொம்மை உயிர் பெற்றால் நீயும் அழகிய ஓர் மழலை தான் மொட்டு மரத்தின் புது உயிர் நீயோ மரத்தின் மறுஜென்மம் நீயோ அழகாய் வளர்ந்து மலர போகிறாயோ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
வெல்லம் காய்ச்சி எடுத்தாலும் தித்திக்கும் நீயும் சிலநேரங்களில் உப்புகரிக்க தான் செய்கிறாய் காலை துயில் எழும் வேளையில் அழகாய் விடியல் காத்துக் கொண்டு இருக்கிறது இந்த புத்தம்புது காலையில் ஐவர் ஒற்றுமைக்கு ஓர் இலக்கணம் ஓர் உயிர் ஐந்து உடலாய் வாழ்வது கதைகளில் மட்டுமே சாத்தியமோ ஒட்டகம் தேவைக்கேற்ப சேமித்து வைக்கும் உன்னிடம் மனிதன் கற்க வேண்டிய பாடம் இது கண் உன் காந்த சக்தியின் வசீகரத்தில் உலகையே கவரும் விந்தை என்னவோ -தேன்கவி
- Get link
- X
- Other Apps
பௌர்ணமி வளர்ந்து தேயும் நிலவும் முழுநிலவாக உலகை கவரும் ஒற்றை நன்நாள் எடை அனைத்தையும் அளந்து காண்பித்து நிருபிக்க சொல்கிறது உலகம் உன்னால் அளக்க முடியா அன்பையும் சேர்த்து ஓடை அளவு சிறிதானாலும் அள்ள அள்ள குறையாத நீரின் அமுதசுரபி நீயோ பூட்டு மனித காவலனும் தோற்றுப் போவான் அழகிய சிறிய நீ காக்கும் சக்தியில் பனைமரம் நெடுநீளம் வளர்ந்தும் நிழல் தர முடியவில்லையே ஏங்கும் உன்னக்கும் ஓர் தனித்துவம் உண்டு -தேன்கவி