சிலையாய் செதுக்கினாயே என்னை உன் அன்பெனும் உளியால்.. தொலைதூர ஒளியாய் உன்னை தொட்டு பிடிக்க நினைத்தும் மின்மினி பூச்சியாய் கண்ணாமூச்சி ஆடுகிறாயே - கனவு இறக்க நினைத்தும் பாரம் குறையவில்லை சுமக்க நினைத்தும் சோகம் தீரவில்லை கலங்க நினைத்தும் கண்ணீர் கலையவில்லை துரத்த நினைத்தும் தூரம் குறையவில்லை எதை தேடும் தேடலில் ஓடுகிறது கடிகார முட்களாய் வாழ்க்கை பயணம் வினை ஏதும் தீண்டாமல் விதைத்தாய் உன்னுள் சுகம் தந்த உன் முகம் காண வந்த நாளும் இதுதானோ-பிறந்தநாள் தேன்கவி
Posts
- Get link
- X
- Other Apps
நினைவு காலங்கள் கரைந்தோட காகித கப்பலில் வரிகள் எழுத நனைத்தாலும் கரையாமல் சில நினைவுகள்.. மாற்றம் நொடிகள் நகர முள்ளும் அசைய வார்த்தை மாற வாழ்க்கை மாற மாறிய மனமும் ஏமாந்து போனது- மாற்றத்தால் பிடிவாதம் பிடித்தது கிடைத்தது பிடிவாதமான நாட்களிலே பிடிவாதமும் பிடிக்காமல் போனது வளரும் காலத்திலே.. வாழ்க்கை தேடியே தொலைகிறது வாழ்க்கை அதன் அர்த்தம் தெரியாமல்.. -தேன்கவி
- Get link
- X
- Other Apps
பாசம் மழை மண்ணில் விழ மனம் வீசும் மண் உணர்த்தியது பாசம்... காற்று வீசும் வேளையில் மெல்ல தலை அசைக்கும் மரக் கிளைகள் உணர்த்தியது பாசம்.. கருமேகம் கண்ட மயில் தோகை விரித்து ஆடி உணர்த்தியது பாசம்.. பொழியும் பௌர்ணமி நிலவும் பூமியின் மேல் படுவது உணர்த்தியது பாசம்... குயிலின் கீதம் இசையாய் மாறி மனிதர்களை மகிழ்விப்பது உணர்த்தியது பாசம்.. மலர்ந்த மலரும் தேன் எடுக்கும் வண்டு இடம் கொண்டது பாசம்.. முகம் பார்த்து குரல் கேட்டு மனதை படிக்கும் அன்னை கொண்டது பாசம்.. தூரம் நின்றாலும் உலகமாய் நம்மையே நினைக்கும் தந்தை கொண்டது பாசம்.. அகில அண்டத்தையும் ஆட்டுவிக்கும் மாய சக்தி தான் பாசமோ.. -தேன்கவி
- Get link
- X
- Other Apps
இயந்திர வாழ்க்கை ஓடி அழுத்த ஓட்டத்தில் திரும்பி பார்க்க வைக்கும் சில நினைவுகள்.. குருவி கூடாய் ஓர் வீடு இருக்க.. கூட்டாஞ்சோறாய் உணவு சமைக்க.. அன்பு அமுதாய் அம்மா கையின் ஒரு பிடியும் வயிறு நிறைக்க.. அழகாய் கழித்த காலமும் கடக்க.. தேவையை தேடி பயணம் தொடர தொலைந்து தான் போனது இன்பம்.. பட்டாம்பூச்சியாய் சுற்றினாலும் கூடு திரும்ப நேரமில்லை.. பார்க்கும் கண்களுக்கு மகிழ்ச்சியாய் தெரிந்தாலும் மனகுமுறல் சொல்ல வார்த்தையில்லை.. தேடி தேடி சேர்த்தாலும் அனுபவிக்க ஆசையில்லை.. ஓய்ந்து திரும்பி பார்க்கையில் ஓடியது ஒன்றும் இல்லை.. கண் அயரும் வேளையில் கதை கேட்க ஆள் இல்லை.. விரட்ட வைக்கும் பணம் வேண்டாம்.. துரத்த வைக்கும் சோதனை வேண்டாம்.. ஓட வைக்கும் நோய் வேண்டாம்.. சிரிக்க வைக்கும் வாழ்க்கை வேண்டும்.. சுற்றி இருக்க சொந்தம் வேண்டும்.. -தேன்கவி
- Get link
- X
- Other Apps
சொந்தம் துணை தேடும் விழிக்கு இமைகள் சொந்தம் தானோ.. கடந்து செல்லும் நாட்களுக்கு நேரம் சொந்தம் தானோ.. விடை அறியா வாழ்க்கைக்கு கேள்விகள் சொந்தம் தானோ.. துரத்தி செல்லும் வண்டிக்கு பாதை சொந்தம் தானோ... துளியாய் வழியும் விழிநீர் கண்ணுக்கு சொந்தம் தானோ.. வீசும் தென்றல் காற்றும் பூமிக்கு சொந்தம் தானோ.. எழுதும் கிறுக்கல்களும் காகிதத்திற்கு சொந்தம் தானோ.. சொல்லிய சொல்லும் நாவிற்கு சொந்தம் தானோ.. தொடர்பு இருந்தும் உரிமை இல்லாத ஏதும் ஒருவருக்கு சொந்தம் தானோ.. வலி அறிந்து விடை சொல்லும் ஆறுதலும் யாருக்கு சொந்தமோ.. கேள்விகளாய் நகர்கிறது எண்ணங்கள்.. -தேன்கவி
- Get link
- X
- Other Apps
ஓட்டம் ஓடி வெல்ல ஓர் குதிரை பந்தயம் ஆனது வாழ்க்கை.. கவனம் மாறாமல் ஓட கடிவாளமாய் ஓர் கனவு.. இலக்கை நோக்கினாலும் விலகி தான் தெரிகிறது கண்முன்.. தூரம் சென்றாலும் கால்களின் ஓட்டம் குறைவதே இல்லை.. முடிவை தேடி தொடரும் பயணத்தில் முடிந்து போகிறது வாழ்க்கை ஓட்டம்.. உடன் ஓடுவது திரும்பி பார்க்க நேரமில்லாத நிலையில்.. ஆணி அரைந்த கால்களோடும் திசை திரும்பா கண்களோடும் இலக்கின் எல்லை தெரியாமல் ஓடும் குதிரையாய் ஓடுகிறது வாழ்க்கை.. -தேன்கவி
- Get link
- X
- Other Apps
விளையாட்டு சிறுவயதாய் இருக்கையிலே சுற்றி திரிந்த விளையாடிய நாட்கள் பக்கத்து வீட்டு அத்தை பிள்ளையும் எதிர் வீட்டு மாமன் பிள்ளையும் உடன்பிறந்தவர்களாய் மாறிய காலம் அது அழகாய் மணலில் கோடு வரைந்து விளையாடிய நொண்டி எங்கே அடிக்கடி நான் வென்றேன் நீ தோற்றாய் எனேம் ஓசை எங்கே வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்ள பழகிய காலம் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இல்லை ஒன்றாய் சுற்றிய நினைவுகள் எங்கே குனிந்து தாவிய பச்சை குதிரை எங்கே மட்டைப்பந்தை தோற்கடித்கும் கிட்டி எங்கே குறிவைத்து அடிக்கும் கோலி எங்கே மகிழ்வாய் கண்ணாமூச்சி ஆடிய காலம் எங்கே கணக்கு கற்றுத்தரும் பல்லாங்குழி எங்கே தொலைத்த இவை அனைத்தும் கனவாய் துரத்துகிறாய் மீண்டும் கிராம வாழ்க்கையை நோக்கி ஓடு என்று நீ மகிழ்ந்த விளையாட்டுகளை உறவுகளை நீ சேமிக்கும் பணத்திற்காய் தொலைத்தது உன் அடுத்த தலைமுறை அனைத்தும் சேமிக்கிறாய் பணத்தால் உறவு பந்தம் பாசம் இவை அனைத்துமே இழுந்து கை அகல கைபேசியில் வாழ்க்கையை தொலைத்து படங்களாக சேமிக்கும் ஞாபகங்களை உணர்வுகளாக சேமித்து வை இதை அன்றி வேறு சொத்து ஏது... ...