நினைவு
காலங்கள் கரைந்தோட
காகித கப்பலில்
வரிகள் எழுத
நனைத்தாலும்
கரையாமல்
சில நினைவுகள்..

மாற்றம்
நொடிகள் நகர
முள்ளும் அசைய
வார்த்தை மாற
வாழ்க்கை மாற
மாறிய மனமும்
ஏமாந்து போனது-
மாற்றத்தால்

பிடிவாதம்
பிடித்தது கிடைத்தது
பிடிவாதமான நாட்களிலே
பிடிவாதமும் பிடிக்காமல்
போனது வளரும்
காலத்திலே..

வாழ்க்கை
தேடியே தொலைகிறது
வாழ்க்கை
அதன் அர்த்தம்
தெரியாமல்..


                                      -தேன்கவி

Comments

Popular posts from this blog