வாழ்க்கை:
அவரவர் கையில் உள்ள நூல்பொம்மை
ஆட்டிவைப்பதும் ஆடுவதும் அவரவர் விருப்பமே
பட்டாம்பூச்சி:
அழகாய் சொல்லும் பாடம்
இன்பமாக சுற்ற நான் பட்ட போராட்டங்கள் எத்தனை எத்தனையோ
அவரவர் கையில் உள்ள நூல்பொம்மை
ஆட்டிவைப்பதும் ஆடுவதும் அவரவர் விருப்பமே
பட்டாம்பூச்சி:
அழகாய் சொல்லும் பாடம்
இன்பமாக சுற்ற நான் பட்ட போராட்டங்கள் எத்தனை எத்தனையோ
சிலை:
உன்னை காணும் போதெல்லாம் ஆயிரம் மௌன மொழி பேசுகிறாய் புரிந்து கொள்ள முடியாமல் நகர்ந்து செல்கிறேன்
நிழல்:
உன் அருமையை உரக்க சொல்லிவிட்டு செல்கிறது சுட்டெரிக்கும் சூரியனின் கோபம்
எதிர்பார்ப்பு:
உன்னை அன்றி ஒரு ஜீவனும் எதார்த்தமாய் வாழ வழி ஏது
நாணயம் :
உன்னை கண்டதும் தன்னையே மறந்துவிடும் மனிதர்களுக்கு இடையே உன் பெயர் நாணயம்
வில்-அம்பு :
அற்புத படைப்பு
நான் (வில்) வளைந்தாலும் என்னை நம்பிய உன்னை(அம்பு) நேராக செயல்படுத்துவேன்
-தேன்கவி
Comments
Post a Comment