தலையணை
அன்னை மடியில் இறக்கும் பாரங்களை பல நேரங்களில்  சுமப்பவள் நீ

காகிதம்
என் ஒவ்வொரு கிறுக்கல்களையும் சுமக்கும் நீயும் ஓர் அன்னை தான்

புன்னகை
எதிர்பார்ப்பு இல்லாமல் ஒவ்வொருவரும்
அளிக்கும் விலையுயர்ந்த பரிசு

கனவு
இலவசமாக செல்லும் ஓர் இன்ப சுற்றுலா
கலைத்திட மனமில்லாமல் சிலர்

கண்
அழகாய் அனைத்தையும் ரசிக்கும் உன்னையே உயிராய் பார்க்கிறது ஓவியம்

                                                          - தேன்கவி

Comments

Popular posts from this blog