கண்ணாமூச்சி:
இருண்ட உலகிலும் விரும்பியதை தேட தயங்காதே என உணர்த்தியவள் நீ
வயல்
வயிறார உணவளித்த உன்னை விலை நிலமாக்கி வேடிக்கை பார்க்கிறான் அடுத்த தலைமுறையை யோசிக்காமல்
ஏணி
தூக்கிவிடவும் தோள் கொடுக்கவும்
உன்னைவிட சிறந்த துணை வேறில்லையே
கிணறு
அள்ள அள்ள குறையாத அமிர்தசுரபி கூட தோற்றுப் போகும் உன் வற்றாத ஊற்று முன்
கோழி
விழித்தெழு மனிதா
பொழுது விடிந்தது
தேடலை தொடங்கு
எனும் மணியோசை நீ
Comments
Post a Comment