கடல்:
அற்புதம் என்று சொல்லவா
அழகு என்று சொல்லவா
பிரம்மிப்பு என்று சொல்லவா
உன்னை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
கைப்பேசி:
உலகையே தன்னுள் அடக்கி
மனிதனை வசியம் செய்த மாயக்காரன் நீ
கரும்பலகை:
உயிரற்ற நீ உயிர் பெற்றாய்
பல ஆயிரம் மேதைகளை உருவாக்கியதால்
கொலுசு
மழலையின் காலில் இனிய நாதம் நீயே
மதுரையை அழிக்க காரணமும் நீயே
கூந்தல்
வசியம் செய்யும் வசீகர
நாணல் தானோ நீ
-தேன்கவி
Comments
Post a Comment