கப்பல்:

தடைகளை எதிர்த்து போராடும்
உன் வல்லமைக்கு மனிதர்கள்
தோற்றுதான் போக வேண்டும்

பறவை:

தேவைகளின் தேடலில் இடமறியாமல்
இன்பமாய் பயணிக்கும் உன்னை கண்டு
பொறாமை கொள்கின்றனர் மனிதர்கள்.

உரிமை:

கேட்காமல் எடுத்த
காலம் கடந்து
போராடி பெற
வேண்டியிருக்கிறது உன்னை

தேனீ:

தனிமையின் பலமும்
ஒற்றுமையின் வலிமையும்
உணர்த்திய சிறு உயிரினம் நீ.

வார்த்தை :

 உணர்வுகளை உயிராய் வெளிப்படுத்தும்
 ‎ஓர் மெல்லிய குரல்.

                                                       -தேன்கவி

Comments

Post a Comment

Popular posts from this blog