ஏக்கம்
பசிக்காக ஏங்கும் குழந்தையும்
பணத்திற்காக ஏங்கி ஓடும்
வாழ்க்கையும் நிம்மதிக்காக ஏங்குகிறது
நினைவு
அழகான தருணங்களையும்
அழைக்க முடியா தருணங்களையும்
உன்னில் வைத்து ரசிக்கிறாய்
பாலைவனம்
வறண்ட உன்னில் முளைத்த செடிகளும் பேசுகிறது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஓர் இடம் உண்டு என்று
சேமிப்பு
பணம் மட்டும் அல்ல நீ சேமிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அடுத்த தலைமுறையின் சொத்து
மேகம்
வெள்ளை நிற காகிதமே
காண்போர் கண்கள் எண்ணும் வண்ணம் காட்சியளளிக்கும் விந்தை என்னவோ
-தேன்கவி
Comments
Post a Comment