மயில்:
ஆடி கொண்டாடும் உன்னை அடுத்த சந்ததியினர் திரை பிம்பமாகவே காண போகின்றனவோ
குடை
என் நிழலும் நனையாதடி
என் நிழலுக்கும் வியர்க்காதடி
நீ என்னோடு இருக்கையில்
தவறு
பட்டுத் தெரிந்தவனும்
பார்த்து தெரிந்தவனும்
திண்டாடுகிறான் உன்னை
தீண்ட கூடாதென்று
ஊமை
உரிமைக்கு ஏங்கும் ஊமை கூட
பேச தவிக்கும் போரட்டத்தின் முடிவுக்கு
அழிப்பான்
தெரியாமல் செய்த தவறை திருத்த உதவி நீ
இன்று தெரிந்தே தவறு செய்கிறாய் என உதவ மறுக்கிறாயோ
Comments
Post a Comment