உணவு:
விளைவித்தவன் ஏங்கும் போது
விலைகொடுத்தவன் வீணாக்குகிறான்
உன் அருமை தெரியாமல்

மனசாட்சி
உலகையே உலுக்கும் சக்தி
உன்னையன்றி வேறு எவருக்கும்
இல்லை

திறவுகோல்
சிறு துரும்பு ஆனாலும் ஆயிரம் ஆயிரம்  பொருள்களின் பாதுகாப்பு நீயோ

ஊதியம்
உன் வருகைக்காக உலகமே ஓடாய் தேய்கிறது வாழ்வின் ஓட்டத்தில்

கரை
தத்தளிக்கும் ஒவ்வொன்றையும்
தாங்கிக்கொள்ள தவிக்கும் மடி நீயோ
                                             
                                                      -தேன்கவி

Comments

Popular posts from this blog