பலூன்
காண முடியா மறுஜென்மமும் கண் முன் தோன்றுகிறது என் உயிர் மூச்சு காற்றை நீ சில நேரம் சுமப்பதால்

தெரு
 அழகாய் துள்ளிய உன் மடியும் அடுக்கு மாடி ஆனது  மனித மாற்றத்தால்

வேலை
இயந்திரமாய் நீ ஆட்டி வைக்கும் ஆட்டத்திற்கு மனிதனும் நூல் பொம்மை தான்

ஒற்றுமை
துணிச்சலான சக்தி படைத்த உனக்கு
ஒன்றாக்க துணிவு இல்லாமல் போனது ஏனோ

நீச்சல்
 எதிர்த்து போரிடும் சக்தியை விளக்க உன்னை அன்றி வேறு ஏது

                                              -தேன்கவி

Comments

Popular posts from this blog