சாயம்
பல வண்ணங்களின் கலவை அல்ல
மனித மனங்களிலன் முகத்திரை நீ
கடிகாரம்
விரட்டி பிடிக்கும் வித்தையும் துரத்தி அடிக்கும் வித்தையும் கற்பித்தவன் நீ
மான்
துள்ளி குதிக்கும் உன்னை அறியா வண்ணம் நகர்கிறது அடுத்த தலைமுறை
மிட்டாய்
மிடுக்காய் நடைபோடுகிறது பொட்டியில் அடைத்த ஒன்று நெகிழி காகிதத்தில்
தங்கம்
உருக்கி உருக்குலைத்தாலும் தன் நிலை மாறாமல் நிற்பவள் நீயோ
-தேன்கவி
Comments
Post a Comment