மழை:
ஏங்கவைக்கிறாய் உன்னை காண
மகிழவைக்கிறாய் உன்னை கண்டதும்
சேமிக்க ஏனோ மனம்தர தயங்குகிறாய்
குழந்தை:
ஒற்றை புன்னகையில் உலகையே தன்வசம் செய்யும் மாயாஜால சக்தி நீ
நிழல்:
உன் அருமையை உரக்க சொல்லிவிட்டு செல்கிறது சுட்டெரிக்கும் சூரியனின் கோபம்
பூ:
குழந்தை வளரும் விதமாய் நீயும் வளர்ந்தாய் மொட்டாய் பூவாய்
புவியை அழகாக்க
வளையல்:
அமைதியான ஓர் ஓசையில் ஆயிரம் மொழி யதார்த்த வாழ்க்கையின் வளைவுகளை உணர்த்த
Comments
Post a Comment