உணர்வு
நீ தோன்றும் சில கணம் மகிழ்ச்சியானாலும்
நிஜத்தில் கனவாய் கலைகிறாய்

தூக்கம்
வேறு உலகிற்கு அழகாய் பயணம் செய்ய வைக்கும் இன்ப சுற்றுலா நீ

மாயம்
மலரும் நினைவுகளில் சிலவற்றுக்கு மாயமாகும் சக்தி தான் என்னவோ

எறும்பு
ஒற்றுமைக்கும் உழைப்புக்கும் உன்னிடம் மனிதர்கள் பாடம் கற்க வேண்டும்

தகவல்
உன்னை சேகரிக்க ஓடும் கூட்டம் ஒன்று
எளிதில் அடைந்துவிடும் கூட்டம் ஒன்று

                                                   -தேன்கவி

Comments

Popular posts from this blog