காளான்
பிறந்த சிலநேரங்களில் இறந்து விடுவோம் என தெரிந்தும் சிரித்துக் கொண்டே பிறப்பவள் நீ

‎வரம்
தேடி அலையும் பலருக்கு மத்தியில் தேடாமலே சிலர் வென்று விடுகின்றனர் உன்னை

ஊர்வலம்
மெல்லமாக நகரும் உன்னிடத்தில்
ஆயிரம் உறவுகள் ஒன்று சேர்கின்றன

வளம்
உன்னை வைத்து தான் அனைத்தையும் எடை போடும் உலகம் இது

‎கதவு
பெரிய அறைகளுக்கும் சிறிய பாதுகாவலன் நீ

                                                                                                                          -தேன்கவி
               

Comments

Popular posts from this blog