தேன்
உன் இனிமையை ஒப்பிட வரையறையே இல்லை
அனைத்து இனிமையிலும் நிறைந்தவள் நீ
தூரல்
மெல்லிய உன் சலசலப்பு ஓசையும்
சிலருக்கு கீதம்
சிலருக்கு உயிர்
உன்னை காண ஏங்கி தவமிருக்கும் மக்களுக்கு நீயும் ஓர் அழகிய மழலையே
மேகம்
உன் வெண்ணிற ஆடையில் வானத்தின் வெட்கத்தை மறைக்கும் அழகு என்னவோ
வணக்கம்
அன்னியர்கள் விரட்டி அடித்த ஓர் அழகிய தமிழ் வரவேற்பு வார்த்தை
பணயம்
சூழ்ச்சிக்கு வித்து நீதானோ
சூதாட வைக்கும் போதையும் நீதானோ
-தேன்கவி
Comments
Post a Comment