ஊடுருவி
ஒளியும் ஒலியும் ஊடுருவலாம்
ஆனால் ஒருவரின் மனதை ஊடுருவது
மலையினும் கடினமே
காற்று
அகிலம் எங்கும் கலந்திருக்கும் உன்னை
வர்ணிக்க வார்த்தை தெரியவில்லை
பிரபலம்
உன் பெயரை எட்டி பிடிக்க வாழ்க்கையில் ஓடும் மனிதர்களின் ஓட்டத்திற்கு முடிவில்லை
மூச்சு
சுவாசிக்க கிடைத்த உன்னை
நேசிக்கவும் வைக்கிறாய் உயிராய்
சொத்து
நிலையில்லா உன்னை அடைய ஏங்கும் மனிதர்களுக்கு ஏனோ நிலையானதை தேட மனமில்லையோ
-தேன்கவி
Comments
Post a Comment