மின்னல்
நொடி பொழுதில் மறையும் உனக்கு
கண்ணை மறைக்கும் சக்தி என்னவோ

காந்தம்
உன்னை போல் ஈர்க்கும் சக்தி இருந்தால்
உலகமே ஒரு கைக்குட்டையில் அடங்கும்

சத்தம்
மௌனம் எனும் அழகிய மாயானம்
ஒலியாய் உருப்பெற்றது உன்னால்

சத்தியம்
எளிதில் ஏற்றுக்கொள்ளும் உன்னை
காப்பாற்ற முடியாமல் தத்தளிக்க வைப்பது ஏனோ

தொட்டில்
அன்னை மடியின் சுகம் கண்டேன் உன்னில்
ஆயிரம் அசைவுக்கு மத்தியில்

                                               -தேன்கவி

Comments

Popular posts from this blog