தொண்டு
தனக்கென சேர்த்து வைக்கவே நேரம் இல்லா மனிதர்களுக்கு உன்னை நினைக்க மனமேது
பரிசு
தகுதிக்கு கிடைத்த வெகுமதியாய் கருதுவதா
அல்ல விலைக்கு கிடைத்த பொருளாய் கருதுவதா உன்னை
காதணி
தொட்டிலில் ஆடும் மழலையாய்
மங்கையர் காதில் ஆடும் அழகு என்னவோ
காரணம்
உன்பின் தான் உலகமே சுழல்கிறது
செய்யும் தவறுகளை மறைக்க
சமையல்
போதும் என்ற மனம் கொடுக்கும்
ஓர் அற்புத கலை நீ
- தேன்கவி
Comments
Post a Comment