அழகு
பார்த்த உடன் வசியம் செய்வது நீதானே
அல்ல பழகிய பின் வசியம் செய்வது நீயோ
உணர்வு
வாழ்க்கை அழகாக நகர்கிறது தெரிந்தே உன்னை சில சமயங்களில் கொன்று
மகிழ்ச்சி
உன்னை அடைய போராடியும்
எவரிடமும் நிலைக்காமல் விளையாடுகிறாய் நீ
சுகம்
தொடரும் அனைத்தும் உன்னை தீண்டவும்
முடிவில் உன்னுடன் முடியவே ஏங்குகிறது
அறிவு
அகிலமும் அரண்டு போகும்
உன்னை கண்முன் கண்டதும்
-தேன்கவி
Comments
Post a Comment