தண்டனை
தவறு என்று தெரிந்தே செய்தாலும் உன்னை ஏற்க மனமில்லை எவருக்கும்

நெகிழ்ச்சி
எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம் நீ

முடிவு
தெளிவாக உன்னை அடைய முடியாமல் தத்தளிக்கும் மனித மனம்

நெஞ்சம்
மனிதர்களுக்குள் இருக்கும் ஓர் பெரிய
நீதிமன்றம் நீ

துயரம்
தேடாமல் கிடைக்கும் உன்னை தொலைத்தால் இன்பம் தேடி வரும்

                                                           -தேன்கவி

Comments

Popular posts from this blog