ஓடம்
அடிக்கும் காற்றும் அசையும் அலையும்
மெல்ல மெல்ல நகர வைக்கும் பயணம் நீ

படம்
ஒரு சிறு புள்ளியில் தொடங்கிய நீ
பெரிதாய் உருமாறும் மாயம் என்னவோ

பழம்
சுவையூட்டும் விருந்தாக இருக்கும் நீயோ
ஏதும் அறியா மனிதனின் ஒப்புமை ஆனாயோ

பலம்
உன் உறுதுணை இன்றி
சிறுதுரும்பையும் ஆசைக்க முடியுமோ

நாற்காலி
உயரத்தில் அமர்ந்து உலகை ஆள
உன் கால்களை தரையில் கிடக்க வைக்கிறாயோ

                                                         -தேன்கவி

Comments

Popular posts from this blog