தச்சன்
அழகாய் வடிவமைக்கும் உன் கையில் உள்ள மாய சக்தி தான் என்னவோ
ஆணி
சிறு துரும்பு தான் பெரிய பொருள்களை
தாங்கும் அற்புதம் நீ
ஆண்டு
வளர்ந்து கொண்டே இருக்கும் நீயோ
வயதானவளாய் காட்சியளிக்கும் மாயம் என்னவோ
நடனம்
வளைந்து நெளிந்து அசைந்து மகிழ வைக்கும் இனிய கலை நீ
குடை
மழையின் பகைவன் நீ
ரசிக்க ஏங்கும் போது தடுக்கும் விந்தை என்னவோ
-தேன்கவி
Comments
Post a Comment