மண்
எவ்வளவு தான் மனிதர்கள் ஆடினாலும் கடைசியில் சரணடைவது உன்னிடமே
மாயம்
மறைந்து கொள்ளும் வித்தைக்காரி
தேடி அலைந்தும் சிக்காத கெட்டிக்காரி
பாகற்காய்
கசப்பானாலும் உடலின் நன்மைக்கு தான்
அதுபோல தான் வாழ்க்கையும் சிறிது கசப்புகளுடன்
தாயம்
உன் ஒற்றை உருட்டில் வாழ்க்கையை தீர்மானிக்கும் அழகிய சக்தி என்னவோ
சக்கரம்
திருமாலின் கையில் சுழலும் நீயும்
வாகனங்களின் அடியில் சுழலும் நீயும்
வாழ்க்கை சுழற்சியை விளக்கும் விந்தை என்னவோ
-தேன்கவி
Comments
Post a Comment