பன்னீர்
வாசனை மணக்கும் திரவியம் ஆனாலும்
அளவுக்கு மீறினால் ஆபத்து தான்

பந்தல்
இளைபாற இடம் தரும் உன்னை
கோயிலாய் காண்கின்றன வெயிலில் வாடும் மக்கள்

கல்வெட்டு
சரித்திரம் அறிய உன்னை செதுக்கிய  முன்னோர்களின் விந்தை என்னவோ

வேஷம்
விளையாட்டாய் வேடிக்கை பார்த்து ரசித்த ஒன்று விளையாடுகிறது நிஜ வாழ்க்கையில் உன்னால்

மெழுகுவர்த்தி
தன்னையே உருக்கும் உன்னை நினைத்து  உருக மனமில்லாமல் அலைகிறது மனிதர்கள்


                                                      -தேன்கவி

Comments

Popular posts from this blog