சீப்பு
வாரிவிடுவதில் நிச்சயம்  மனிதர்கள் உன்னிடம் தோற்றுபோவார்

நெல்லிக்கனி
நட்பின் இலக்கணத்தை உணர்த்த உன்னைவிட அரிய கனி ஏது

நிரூபி
ஒவ்வொரு செயலிலும் உன்னை அடைய தக்க சமயம் காக்க வேண்டும் போலும்

‎பறை
இடி ஓசையை விட வானை தொடும் சக்தி
உனக்கு இருக்கும் அற்புதம் ஏனோ

*மறுப்பு
உன்னை ஏற்க முடியாமல் சிலர்
உன்னை ஏற்றும் வெளிபடுத்த முடியாமல் சிலர்
வாழ்க்கையின் விந்தை என்னவோ

                                                      -தேன்கவி

Comments

Popular posts from this blog