களிறு
மெல்லிய உன் அசைவிலும் அம்பாரியாய் ஊர் சுற்றும் அதிசயம் தானோ

காகிதம்
கிழித்து கசக்கி எறிந்ததை மீண்டும் சரி செய்ய நினைப்பது போல தான் வாழ்க்கையும்

பேனா
உன்னில் உள்ள மை தான் உன்  ஆயுளை தீர்மானிக்கும்
சிலருக்கு தன்னில் உள்ள எண்ணங்களை போல

நாளிதழ்
காகிதமும் மையும் ஒன்றானாலும் உன்னில் அச்சிடபடும் செய்திகள் மட்டும் ஏனோ வேறல்லவே தினமும் மாறும் வாழ்க்கையை போல்

‎மிளகு
உருவில் சிறியவனாலும் உன்னை கண்டால் பகைவனே படை நடுங்கும் வித்தை என்னவோ

                                                       -தேன்கவி

Comments

Popular posts from this blog