இலவசம்
ஒரு வழியில் கொடுத்து மறுவழியில் சுரண்டும் உனக்கு பெயர் தான் இலவசமோ
கல்வி
பகுத்தறிவு பெற உன்னை நாடிய காலம் கடந்து
பணம் இருந்தால் மட்டுமே உன்னை பெறும் நிலை என்னவோ
வழி
உன்னை தெரியாமல் அலையும் பலருக்கு இலக்கின் அடையாளம் தெரிவதில்லையோ
வாழ்வு
உன்னை புரிந்துகொள்ள உன்னை நேசிக்க நினைத்தும் வெறுக்க வைக்கிறாயோ
தடம்
வாழ்வின் ஆதாரமாய் உன்னிடம்
தன்னையே தொலைப்பது தான் வாழ்க்கை
-தேன்கவி
Comments
Post a Comment