தடயம்
மறுக்க நினைக்கும் ஒவ்வொரு செயலுக்கும் தெரியாத சாட்சியாய் இருப்பவள் நீயோ

தென்றல்
மெல்ல வருடும் பூங்காற்றும்
மென்மையாய் கதை சொல்லும் அழகு என்னவோ

வண்ணம்
பலவகை கலந்த கலவையே
மனிதனும் உன்போல் நிறம்மாற வைக்கும்
வியப்பு தான் வாழ்வோ

படைப்பு
மனிதனும் அழகிய படைப்பாளி தான்
பிரம்மனே வியக்கும் அளவுக்கு

 தேன்கூடு
 ஒற்றுமையின் வலிமை என்ன என்பதை
 உன்னை கலைக்கும் ஒவ்வொருவரும்
 புரிந்துகொள்ள படைக்கப்பட்டது நீயோ

                                                         -தேன்கவி

Comments

Popular posts from this blog