பொறாமை
உணர்வுகள் உள்ள அனைவரிடமும் உள்ள நீ
வெளிகாட்ட இடம் தெரியாமல் வேறுபடுகிறாய்
கண்டிப்பு
அன்பின் அழகிய வெளிப்பாடே
உன்னை புரிந்துகொள்ள பல காலம் கடக்க வேண்டுமோ
காரணம்
செயல்களின் பின்னணியை உணர்த்த
உன்னை தேடி அலைகிறார்கள் மனிதர்கள்
காலம்
உன்னை நோக்கி தான் நகர்கிறது வாழ்க்கை விடை தெரிய முயற்சித்துக் கொண்டே
சாபம்
தெரிந்தே செய்யும் சிறு தவறுக்கும்
கிடைத்த பெரிய வெகுமதி நீ
-தேன்கவி
Comments
Post a Comment