சொந்தம்
சுட்டெரிக்கும் சூரியனும்
பூமிக்கு சொந்தமில்லை..
கரை தொடும் அலையும்
கடலை சேர்வதில்லை..
கூவும் குயிலும் கானம்
இசைக்க போவதில்லை..
நீல வானமும்
மை தர போவதில்லை..
ஏங்கும் மண்ணிற்கு மழை
தர மேகம் இசைவதில்லை..
சுவாசிக்கும் காற்று
நச்சு இல்லாமல் இருப்பதில்லை..
தனுக்குப் போக மீதம்
தருவது தர்மம் இல்லை..
தாகத்தில் ஏங்க கடன்கேட்கும்
நிலை வருவது நியாயம் இல்லை..
குருவி கூடு கட்டிய ஒற்றை
மரத்தை சொந்தம் ஆக்கியதில்லை..
கேட்டவுடன் கிடைக்காத எதும்
கிடைக்கும் போது தேவையில்லை..
கிறுக்கல்களும் கண்ணீர் துளிகளும் கசிகிறது மனம்
ஆறுதல் கூற ஆளில்லாமல்..
வெறுக்க நினைக்கும் நிகழ்வுகளும்
தூரத்த வைக்க துணியாமல் இல்லை..
கடந்த பாதையும்
கடக்கும் பாதையும்
கண்முன்னே தோன்ற
புன்னகை மட்டுமே உனக்கு
சொந்தம் என்றது வாழ்க்கை...
தேன்கவி
Comments
Post a Comment