சில நேரம்
சில நேரங்களில்..
எண்ணங்களில்
சில நினைவுகளாய்..
சில கனவுகளாய்..
சில உணர்வுகளாய்..
யோசித்துப் பார்க்கிறேன்
திரும்பி பார்க்கிறேன்
அழகாய் சிரித்த நாட்களும்
ஏங்கி அழுத நாட்களும்
பேசிய வார்த்தைகள்
திரும்பி தரும் ஞாபகங்கள்
கடந்து போன காலங்கள்
தவித்து நின்ற தருணங்கள்
வாழ்க்கை புரியாத ஏக்கங்கள்
புரிந்து கொண்ட நொடிகள்
விலக நினைக்கும் உறவுகள்
துரத்தினாலும் உடனுள்ள சொந்தம்
தொலைந்து போன இரவுகள்
தொலைக்க முடிய உயிர்கள்
தேவைக்கு அப்பால்
உலகம் மாறினாலும்
மாறத மனம் வேண்டும்
இனிய இன்ப தரும் நினைவோடு..
தேன்கவி
Comments
Post a Comment