நம்பிக்கை
உன் தயவு இல்லாமல் முன்னேற்றம் எனும் படியை தீண்ட முடியாது
உழவு
உணவு அளித்த உன்னை
தொழிலாய் ஏற்க மனமில்லை எவருக்கும்
கண்ணீர்
ஆறுதல் தரும் ஆயிரம் வார்த்தைக்கு இடையில் உன்மூலம் தொலைகிறது என் சோகம்
ஒப்பந்தம்
விரும்பிய விருப்பங்கள் நிறைவேற
நம்முள் பண்ணிக் கொள்ளும் ஓர் கையொப்பம்
நடுக்கம்
தயக்கத்தின் மறுபெயர் நீதானோ
துணிந்ததும் ஒளிந்து கொள்பவள் நீயோ
-தேன்கவி
Comments
Post a Comment