மன ஓட்டம்

மெல்லிய பூங்காற்று
மெதுவாய் கையசைக்க
தீண்டும் தூரம் நின்றும்
அசைய மறுக்கும் கிளைகளும்
அதனில் ஆசையாய் ஊசல்
ஆடும் அழகிய குருவிகூடும்
வெகுநேரமாய் காத்திருக்கும்
தன் தாயை காண குழந்தையும்
இருள் சூழ்ந்த மாலை வேளையில்
பொன் ஒளி பொழியும் நிலவும்
குருவிகளோடு ஏங்கி தவிக்க
மனமோ பல நேரங்களில்
இந்த எண்ணத்தோடு அலைமோத
ரசனையோடு நிலவொளியை பார்க்க
தாயை கண்ட குருவியாய்
மகிழ்கிறது மனம்...


                                     தேன்கவி


Comments

Popular posts from this blog