பின்னல்
வாழ்க்கை அழகாக தெரிகிறது தூரத்தில்
நெருங்கி வரும்போது பின்னல்களாய் தெரிகிறது
வெற்றி
தன் திறமைக்கு கிடைக்கும் அழகிய வெகுமதி நீ
ஆனால் உன்னை அடைய எத்தனை தியாகமோ
உடும்பு
உன்னைபோல் ஒட்டிக்கொள்ள ஆசை
பிடித்ததை விட்டு எங்கும் அசையாமல்
போதனை
எளிதாக கிடைக்கும் உன்னை
ஏற்க தான் மனமில்லை எவருக்கும்
கர்வம்
உன்னை தீண்டிய எவரும் வெற்றி பாதையை அடைந்தது இல்லை
-தேன்கவி
Comments
Post a Comment