கிறுக்கல்கள்

கிறுக்கல்கள் ஒவ்வொன்றும்
கதை சொல்கிறது..
ஆயிரம் சோகம்
ஆயிரம் இன்பம்
அனைத்தும் மனதை
உருகுலைக்க..
சொல்ல வாயும்
வரவில்லை..
அழ கண்ணீரும்
கண்ணில் இல்லை..
சிரிக்கும் நேரத்தில்
சத்தம் கூட‌ கேட்டதில்லை..
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க
மனம் கூட வரவில்லை..
விதியின் விளையாட்டில்
கைபொம்மைகளாய்..
எதிர்பார்ப்போடு ஏங்கும்
அற்ப உயிராய்..
இரவில் உலாவும்
தனி ஆசைகளாய்..
தொலைக்க ஏங்கும்
நிறைவேறா கனவுகளாய்..
ரசிக்க நினைக்கும்
தனிமை நிமிடங்களாய்..
பச்சோந்தியிடம் தோற்றுப் போகும்
மனித குணமாய்..
முடிவில்லா நிகழ்வுகளாய்
எவற்றை கிறுக்க
வார்த்தை தேடுவேன் நான்!!

                                       தேன்கவி

Comments

Popular posts from this blog