என் கனவு
விடியாத இரவு
ஒன்று வேண்டும்
கனவுகளில் தொலைந்திடாத
வாழ்க்கை வேண்டும்
ஆரவாரம் இல்லாத ஓர்
அமைதி வேண்டும்
விடிந்ததும் புதிதாக பிறந்த
உணர்வு வேண்டும்
தவறை மறக்கும்
சக்தி வேண்டும்
துரோகம் தாங்கிக் கொள்ள
வலிமை வேண்டும்
எதிர்பார்ப்பு இல்லாத
எண்ணம் வேண்டும்
கடமையை செய்ய
மன உறுதி வேண்டும்
தனிமையை ரசிக்கும்
தைரியம் வேண்டும்
துரத்தி ஓட
இலட்சியம் வேண்டும்
தூரம் நின்று ரசிக்கும்
வாழ்க்கை வேண்டும்
மழலையாய் மாறி
வாழ வேண்டும்
கண்ணீரை எதிர்க்கும்
துணிச்சல் வேண்டும்
போர்க்களமாய் இருக்கும் வாழ்க்கையில்
அமைதி வேண்டும்
இவை அனைத்தும்
தோற்றுப் போனாலும்
என்னை நானே செதுக்கும் உளியாக வேண்டும்....
விடியாத இரவு
ஒன்று வேண்டும்
கனவுகளில் தொலைந்திடாத
வாழ்க்கை வேண்டும்
ஆரவாரம் இல்லாத ஓர்
அமைதி வேண்டும்
விடிந்ததும் புதிதாக பிறந்த
உணர்வு வேண்டும்
தவறை மறக்கும்
சக்தி வேண்டும்
துரோகம் தாங்கிக் கொள்ள
வலிமை வேண்டும்
எதிர்பார்ப்பு இல்லாத
எண்ணம் வேண்டும்
கடமையை செய்ய
மன உறுதி வேண்டும்
தனிமையை ரசிக்கும்
தைரியம் வேண்டும்
துரத்தி ஓட
இலட்சியம் வேண்டும்
தூரம் நின்று ரசிக்கும்
வாழ்க்கை வேண்டும்
மழலையாய் மாறி
வாழ வேண்டும்
கண்ணீரை எதிர்க்கும்
துணிச்சல் வேண்டும்
போர்க்களமாய் இருக்கும் வாழ்க்கையில்
அமைதி வேண்டும்
இவை அனைத்தும்
தோற்றுப் போனாலும்
என்னை நானே செதுக்கும் உளியாக வேண்டும்....
-தேன்கவி
Comments
Post a Comment