சொந்தம்
துணை தேடும் விழிக்கு
இமைகள் சொந்தம் தானோ..
கடந்து செல்லும் நாட்களுக்கு
நேரம் சொந்தம் தானோ..
விடை அறியா வாழ்க்கைக்கு
கேள்விகள் சொந்தம் தானோ..
துரத்தி செல்லும் வண்டிக்கு
பாதை சொந்தம் தானோ...
துளியாய் வழியும் விழிநீர்
கண்ணுக்கு சொந்தம் தானோ..
வீசும் தென்றல் காற்றும்
பூமிக்கு சொந்தம் தானோ..
எழுதும் கிறுக்கல்களும்
காகிதத்திற்கு சொந்தம் தானோ..
சொல்லிய சொல்லும்
நாவிற்கு சொந்தம் தானோ..
தொடர்பு இருந்தும்
உரிமை இல்லாத ஏதும்
ஒருவருக்கு சொந்தம் தானோ..
வலி அறிந்து
விடை சொல்லும்
ஆறுதலும் யாருக்கு சொந்தமோ..
கேள்விகளாய் நகர்கிறது எண்ணங்கள்..
-தேன்கவி
Comments
Post a Comment