பாசம்
மழை மண்ணில் விழ
மனம் வீசும் மண்
 உணர்த்தியது பாசம்...
காற்று வீசும் வேளையில்
மெல்ல தலை அசைக்கும்
மரக் கிளைகள்
உணர்த்தியது பாசம்..
கருமேகம் கண்ட மயில்
தோகை விரித்து ஆடி
உணர்த்தியது பாசம்..
பொழியும் பௌர்ணமி நிலவும்
பூமியின் மேல் படுவது
உணர்த்தியது பாசம்...
குயிலின் கீதம் இசையாய்
மாறி மனிதர்களை மகிழ்விப்பது உணர்த்தியது பாசம்..
மலர்ந்த மலரும் தேன்
எடுக்கும் வண்டு இடம்
கொண்டது பாசம்..
முகம் பார்த்து
குரல் கேட்டு
மனதை படிக்கும்
அன்னை கொண்டது பாசம்..
தூரம் நின்றாலும்
உலகமாய் நம்மையே
நினைக்கும் தந்தை
கொண்டது பாசம்..
அகில அண்டத்தையும்
ஆட்டுவிக்கும் மாய சக்தி

தான் பாசமோ..
   
                                                 -தேன்கவி

Comments

Popular posts from this blog