ஓட்டம்
ஓடி வெல்ல
ஓர் குதிரை பந்தயம்
ஆனது வாழ்க்கை..
கவனம் மாறாமல்
ஓட கடிவாளமாய்
ஓர் கனவு..
இலக்கை நோக்கினாலும்
விலகி தான்
தெரிகிறது கண்முன்..
தூரம் சென்றாலும்
கால்களின் ஓட்டம்
குறைவதே இல்லை..
முடிவை தேடி
தொடரும் பயணத்தில்
முடிந்து போகிறது
வாழ்க்கை ஓட்டம்..
உடன் ஓடுவது
திரும்பி பார்க்க
நேரமில்லாத நிலையில்..
ஆணி அரைந்த
கால்களோடும்
திசை திரும்பா
கண்களோடும்
இலக்கின் எல்லை
தெரியாமல்
ஓடும் குதிரையாய்
ஓடுகிறது வாழ்க்கை..
-தேன்கவி
Comments
Post a Comment