மனமே

 எத்தனை முறை தேற்றினாலும்
தோற்றுப் போகிறது மனம்..
சொல்ல வார்த்தைகள் தேடி
சொல்ல நினைக்கும் முன்
கண்ணீராய் பேசுகிறாய் மனமே..
அடைமழையும் அடைந்து போக
ஆரவாரமாக ஆர்ப்பரிக்கும் மனமே..
ஆயிரம் முறை சமாதானமும்
அரைநொடியில் கரைக்கும் மனமே..
உன்னை அமைதியாக்க இறப்பு
ஒன்று தான் தீர்வோ மனமே..
கண் இமை மூடினாலும்
உன் எண்ணங்கள் தூங்காதோ மனமே..
நேசிக்கும் அனைத்தும் உன்னை
ஓய்வில்லாமல் செய்கிறதோ மனமே..
பம்பரமாய் சுழன்றாலும் வாழ்க்கை
உன்னிடம் எதிர்பார்கிறதோ மனமே..
ஆயிரம் யோசனைகள் இருந்தாலும்

என்றும் மகிழ்வாய் மனமே!!


                                       -தேன்கவி

Comments

Popular posts from this blog