பழங்காலம்

கண் இரண்டும் ஏங்குது
கனவாய் தொலைத்திடும் பயத்தில்..
விழித்துக்கொள்ள முடியாமல்
துரத்துகிறது..
தேவைகள் அனைத்தும் கனவில் நிறைவேற..
காசு பணம் தேவையில்லை
பாசமா பேச வார்த்தை இல்லை..
அழும் குழந்தைக்கு ஆறுதல்
சொல்ல நேரமில்லை...
ஒரு வாய் சோறு
அம்மா கையில் வங்க ஏங்கியதில்லை..
அலைந்து கலைத்து வந்தாலும்
அப்பா கைபிடித்து சுற்ற மறந்ததில்லை..
ஆயிரம் சண்டை எங்களுக்குள்
வாந்தாலும்
உடன்பிறப்பை என்றும் விட்டுக்கொடுத்ததில்லை...
உறவுகளாய் சேர்ந்து கோடை விடுமுறையை
கொண்டாடிய காலம் எங்கே..
ஊரெங்கும் பசுமையாய் தெரியும்
வயல்வெளி எங்கே..
கிராம வாழ்க்கையை தொலைத்து
நகரத்தில் பூட்டி வைக்கபடும் நிலை இங்கே..
சொந்தம் பந்தம் ஏதும் இல்லை
பக்கத்து வீட்டுகாரனையும்
தெரியவில்லை...
ஒரு குழந்தை இருந்தும்
பாசம் காட்ட நேரமில்லை..
உனக்கு சேமிக்க ஓடுவதாய்
உன்னையே தொலைக்கும் நிலை எங்கே..
கண்முன்னே கடவுள் வந்தால்
அழகாய் பழங்கால வாழ்க்கை
கேட்பேன்..
ஒருநாள் வாழ்க்கையும்
பலநாள் நிறைவுதரும் என்பேன்..


               

                                                   -தேன்கவி




Comments

Popular posts from this blog