சிலையாய் செதுக்கினாயே என்னை
உன் அன்பெனும் உளியால்..

தொலைதூர ஒளியாய்
உன்னை தொட்டு
பிடிக்க நினைத்தும்
மின்மினி பூச்சியாய்
கண்ணாமூச்சி ஆடுகிறாயே - கனவு

இறக்க நினைத்தும்
பாரம் குறையவில்லை
சுமக்க நினைத்தும்
சோகம் தீரவில்லை
கலங்க நினைத்தும்
கண்ணீர் கலையவில்லை
துரத்த நினைத்தும்
தூரம் குறையவில்லை
எதை தேடும்
தேடலில் ஓடுகிறது
கடிகார முட்களாய்
வாழ்க்கை பயணம்

வினை ஏதும் தீண்டாமல்
விதைத்தாய் உன்னுள்
சுகம் தந்த
உன் முகம் காண
வந்த நாளும்
இதுதானோ-பிறந்தநாள்
    
                                          தேன்கவி

Comments

Popular posts from this blog